சங்கீதம் 94 – Psalms 94


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 94 – Read Holy Bible Book Of Psalms Chapter 94 In Tamil With English Reference


1 - நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

English:- O Lord , The God Who Avenges, O God Who Avenges, Shine Forth.

சங்கீதம் 94-1 - Psalms 94-1நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

2 - பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.

English:- Rise Up, O Judge Of The Earth; Pay Back To The Proud What They Deserve.


3 - கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?

English:- How Long Will The Wicked, O Lord , How Long Will The Wicked Be Jubilant?

சங்கீதம் 94-3 - Psalms 94-3கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?

4 - எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

English:- They Pour Out Arrogant Words; All The Evildoers Are Full Of Boasting.

சங்கீதம் 94-4 - Psalms 94-4எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

5 - கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

English:- They Crush Your People, O Lord ; They Oppress Your Inheritance.

சங்கீதம் 94-5 - Psalms 94-5கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

6 - விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:

English:- They Slay The Widow And The Alien; They Murder The Fatherless.

சங்கீதம் 94-6 - Psalms 94-6விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:

7 - கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

English:- They Say, "The Lord Does Not See; The God Of Jacob Pays No Heed."

சங்கீதம் 94-7 - Psalms 94-7கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

8 - ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

English:- Take Heed, You Senseless Ones Among The People; You Fools, When Will You Become Wise?

சங்கீதம் 94-8 - Psalms 94-8ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

9 - காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

English:- Does He Who Implanted The Ear Not Hear? Does He Who Formed The Eye Not See?

சங்கீதம் 94-9 - Psalms 94-9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

10 - ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?

English:- Does He Who Disciplines Nations Not Punish? Does He Who Teaches Man Lack Knowledge?


11 - மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.

English:- The Lord Knows The Thoughts Of Man; He Knows That They Are Futile.

சங்கீதம் 94-11 - Psalms 94-11மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.

12 - கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,

English:- Blessed Is The Man You Discipline, O Lord , The Man You Teach From Your Law;

சங்கீதம் 94-12 - Psalms 94-12கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,

13 - சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.

English:- You Grant Him Relief From Days Of Trouble, Till A Pit Is Dug For The Wicked.

சங்கீதம் 94-13 - Psalms 94-13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.

14 - கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.

English:- For The Lord Will Not Reject His People; He Will Never Forsake His Inheritance.

சங்கீதம் 94-14 - Psalms 94-14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.

15 - நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

English:- Judgment Will Again Be Founded On Righteousness, And All The Upright In Heart Will Follow It.

சங்கீதம் 94-15 - Psalms 94-15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

16 - துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?

English:- Who Will Rise Up For Me Against The Wicked? Who Will Take A Stand For Me Against Evildoers?

சங்கீதம் 94-16 - Psalms 94-16துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?

17 - கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.

English:- Unless The Lord Had Given Me Help, I Would Soon Have Dwelt In The Silence Of Death.

சங்கீதம் 94-17 - Psalms 94-17கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.

18 - என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

English:- When I Said, "My Foot Is Slipping," Your Love, O Lord , Supported Me.

சங்கீதம் 94-18 - Psalms 94-18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

19 - என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.

English:- When Anxiety Was Great Within Me, Your Consolation Brought Joy To My Soul.

சங்கீதம் 94-19 - Psalms 94-19என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.

20 - தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?

English:- Can A Corrupt Throne Be Allied With You- One That Brings On Misery By Its Decrees?


21 - அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.

English:- They Band Together Against The Righteous And Condemn The Innocent To Death.

சங்கீதம் 94-21 - Psalms 94-21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.

22 - கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.

English:- But The Lord Has Become My Fortress, And My God The Rock In Whom I Take Refuge.

சங்கீதம் 94-22 - Psalms 94-22கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.

23 - அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.

English:- He Will Repay Them For Their Sins And Destroy Them For Their Wickedness; The Lord Our God Will Destroy Them.

சங்கீதம் 94-23 - Psalms 94-23அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.


Previous Chapter Next Chapter