சங்கீதம் 82 – Psalms 82


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 82 – Read Holy Bible Book Of Psalms Chapter 82 In Tamil With English Reference


1 - தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

English:- God Presides In The Great Assembly; He Gives Judgment Among The "Gods":

சங்கீதம் 82-1 - Psalms 82-1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

2 - எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

English:- "How Long Will You Defend The Unjust And Show Partiality To The Wicked? Selah


3 - ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

English:- Defend The Cause Of The Weak And Fatherless; Maintain The Rights Of The Poor And Oppressed.

சங்கீதம் 82-3 - Psalms 82-3ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

4 - பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

English:- Rescue The Weak And Needy; Deliver Them From The Hand Of The Wicked.

சங்கீதம் 82-4 - Psalms 82-4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

5 - அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

English:- "They Know Nothing, They Understand Nothing. They Walk About In Darkness; All The Foundations Of The Earth Are Shaken.

சங்கீதம் 82-5 - Psalms 82-5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

6 - நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

English:- "I Said, 'You Are "Gods"; You Are All Sons Of The Most High.'

சங்கீதம் 82-6 - Psalms 82-6நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

7 - ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

English:- But You Will Die Like Mere Men; You Will Fall Like Every Other Ruler."

சங்கீதம் 82-7 - Psalms 82-7ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

8 - தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

English:- Rise Up, O God, Judge The Earth, For All The Nations Are Your Inheritance.

சங்கீதம் 82-8 - Psalms 82-8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.


Previous Chapter Next Chapter