சங்கீதம் 58 – Psalms 58


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 58 – Read Holy Bible Book Of Psalms Chapter 58 In Tamil With English Reference


1 - மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?

English:- Do You Rulers Indeed Speak Justly? Do You Judge Uprightly Among Men?

சங்கீதம் 58-1 - Psalms 58-1மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?

2 - மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.

English:- No, In Your Heart You Devise Injustice, And Your Hands Mete Out Violence On The Earth.


3 - துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.

English:- Even From Birth The Wicked Go Astray; From The Womb They Are Wayward And Speak Lies.

சங்கீதம் 58-3 - Psalms 58-3துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.

4 - சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

English:- Their Venom Is Like The Venom Of A Snake, Like That Of A Cobra That Has Stopped Its Ears,

சங்கீதம் 58-4 - Psalms 58-4சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

5 - பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

English:- That Will Not Heed The Tune Of The Charmer, However Skillful The Enchanter May Be.

சங்கீதம் 58-5 - Psalms 58-5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

6 - தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.

English:- Break The Teeth In Their Mouths, O God; Tear Out, O Lord , The Fangs Of The Lions!

சங்கீதம் 58-6 - Psalms 58-6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.

7 - கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.

English:- Let Them Vanish Like Water That Flows Away; When They Draw The Bow, Let Their Arrows Be Blunted.

சங்கீதம் 58-7 - Psalms 58-7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.

8 - கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.

English:- Like A Slug Melting Away As It Moves Along, Like A Stillborn Child, May They Not See The Sun.

சங்கீதம் 58-8 - Psalms 58-8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.

9 - முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.

English:- Before Your Pots Can Feel The Heat Of The Thorns- Whether They Be Green Or Dry-the Wicked Will Be Swept Away.

சங்கீதம் 58-9 - Psalms 58-9முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.

10 - பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.

English:- The Righteous Will Be Glad When They Are Avenged, When They Bathe Their Feet In The Blood Of The Wicked.


11 - அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.

English:- Then Men Will Say, "Surely The Righteous Still Are Rewarded; Surely There Is A God Who Judges The Earth."

சங்கீதம் 58-11 - Psalms 58-11அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.


Previous Chapter Next Chapter