சங்கீதம் 52 – Psalms 52


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 52 – Read Holy Bible Book Of Psalms Chapter 52 In Tamil With English Reference


1 - பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.

English:- Why Do You Boast Of Evil, You Mighty Man? Why Do You Boast All Day Long, You Who Are A Disgrace In The Eyes Of God?

சங்கீதம் 52-1 - Psalms 52-1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.

2 - நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

English:- Your Tongue Plots Destruction; It Is Like A Sharpened Razor, You Who Practice Deceit.


3 - நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)

English:- You Love Evil Rather Than Good, Falsehood Rather Than Speaking The Truth. Selah

சங்கீதம் 52-3 - Psalms 52-3நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)

4 - கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.

English:- You Love Every Harmful Word, O You Deceitful Tongue!

சங்கீதம் 52-4 - Psalms 52-4கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.

5 - தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)

English:- Surely God Will Bring You Down To Everlasting Ruin: He Will Snatch You Up And Tear You From Your Tent; He Will Uproot You From The Land Of The Living. Selah

சங்கீதம் 52-5 - Psalms 52-5தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)

6 - நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:

English:- The Righteous Will See And Fear; They Will Laugh At Him, Saying,

சங்கீதம் 52-6 - Psalms 52-6நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:

7 - இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.

English:- "Here Now Is The Man Who Did Not Make God His Stronghold But Trusted In His Great Wealth And Grew Strong By Destroying Others!"

சங்கீதம் 52-7 - Psalms 52-7இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.

8 - நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

English:- But I Am Like An Olive Tree Flourishing In The House Of God; I Trust In God's Unfailing Love For Ever And Ever.

சங்கீதம் 52-8 - Psalms 52-8நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

9 - நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.

English:- I Will Praise You Forever For What You Have Done; In Your Name I Will Hope, For Your Name Is Good. I Will Praise You In The Presence Of Your Saints.

சங்கீதம் 52-9 - Psalms 52-9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.


Previous Chapter Next Chapter