சங்கீதம் 2 – Psalms 2


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 2 – Read Holy Bible Book Of Psalms Chapter 2 In Tamil With English Reference


1 - ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

English:- Why Do The Nations Conspire And The Peoples Plot In Vain?

சங்கீதம் 2-1 - Psalms 2-1ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

2 - கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

English:- The Kings Of The Earth Take Their Stand And The Rulers Gather Together Against The Lord And Against His Anointed One.


3 - அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

English:- "Let Us Break Their Chains," They Say, "And Throw Off Their Fetters."

சங்கீதம் 2-3 - Psalms 2-3அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

4 - பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

English:- The One Enthroned In Heaven Laughs; The Lord Scoffs At Them.

சங்கீதம் 2-4 - Psalms 2-4பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

5 - அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.

English:- Then He Rebukes Them In His Anger And Terrifies Them In His Wrath, Saying,

சங்கீதம் 2-5 - Psalms 2-5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.

6 - நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

English:- "I Have Installed My King On Zion, My Holy Hill."

சங்கீதம் 2-6 - Psalms 2-6நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.

7 - தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

English:- I Will Proclaim The Decree Of The Lord : He Said To Me, "You Are My Son ; Today I Have Become Your Father.

சங்கீதம் 2-7 - Psalms 2-7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

8 - என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

English:- Ask Of Me, And I Will Make The Nations Your Inheritance, The Ends Of The Earth Your Possession.

சங்கீதம் 2-8 - Psalms 2-8என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

9 - இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

English:- You Will Rule Them With An Iron Scepter ; You Will Dash Them To Pieces Like Pottery."

சங்கீதம் 2-9 - Psalms 2-9இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

10 - இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

English:- Therefore, You Kings, Be Wise; Be Warned, You Rulers Of The Earth.


11 - பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

English:- Serve The Lord With Fear And Rejoice With Trembling.

சங்கீதம் 2-11 - Psalms 2-11பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

12 - குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

English:- Kiss The Son, Lest He Be Angry And You Be Destroyed In Your Way, For His Wrath Can Flare Up In A Moment. Blessed Are All Who Take Refuge In Him.

சங்கீதம் 2-12 - Psalms 2-12குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.


Previous Chapter Next Chapter