சங்கீதம் 146 – Psalms 146


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 146 – Read Holy Bible Book Of Psalms Chapter 146 In Tamil With English Reference


1 - அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

English:- Praise The Lord . Praise The Lord , O My Soul.

சங்கீதம் 146-1 - Psalms 146-1அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

2 - நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

English:- I Will Praise The Lord All My Life; I Will Sing Praise To My God As Long As I Live.


3 - பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.

English:- Do Not Put Your Trust In Princes, In Mortal Men, Who Cannot Save.

சங்கீதம் 146-3 - Psalms 146-3பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.

4 - அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

English:- When Their Spirit Departs, They Return To The Ground; On That Very Day Their Plans Come To Nothing.

சங்கீதம் 146-4 - Psalms 146-4அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

5 - யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

English:- Blessed Is He Whose Help Is The God Of Jacob, Whose Hope Is In The Lord His God,

சங்கீதம் 146-5 - Psalms 146-5யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.

6 - அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

English:- The Maker Of Heaven And Earth, The Sea, And Everything In Them- The Lord , Who Remains Faithful Forever.

சங்கீதம் 146-6 - Psalms 146-6அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

7 - அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.

English:- He Upholds The Cause Of The Oppressed And Gives Food To The Hungry. The Lord Sets Prisoners Free,

சங்கீதம் 146-7 - Psalms 146-7அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.

8 - குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

English:- The Lord Gives Sight To The Blind, The Lord Lifts Up Those Who Are Bowed Down, The Lord Loves The Righteous.

சங்கீதம் 146-8 - Psalms 146-8குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

9 - பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

English:- The Lord Watches Over The Alien And Sustains The Fatherless And The Widow, But He Frustrates The Ways Of The Wicked.

சங்கீதம் 146-9 - Psalms 146-9பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

10 - கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.

English:- The Lord Reigns Forever, Your God, O Zion, For All Generations. Praise The Lord .


Previous Chapter Next Chapter