சங்கீதம் 111 – Psalms 111


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 111 – Read Holy Bible Book Of Psalms Chapter 111 In Tamil With English Reference


1 - அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

English:- Praise The Lord . I Will Extol The Lord With All My Heart In The Council Of The Upright And In The Assembly.

சங்கீதம் 111-1 - Psalms 111-1அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

2 - கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.

English:- Great Are The Works Of The Lord ; They Are Pondered By All Who Delight In Them.


3 - அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

English:- Glorious And Majestic Are His Deeds, And His Righteousness Endures Forever.

சங்கீதம் 111-3 - Psalms 111-3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.

4 - அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.

English:- He Has Caused His Wonders To Be Remembered; The Lord Is Gracious And Compassionate.

சங்கீதம் 111-4 - Psalms 111-4அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.

5 - தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.

English:- He Provides Food For Those Who Fear Him; He Remembers His Covenant Forever.

சங்கீதம் 111-5 - Psalms 111-5தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.

6 - ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

English:- He Has Shown His People The Power Of His Works, Giving Them The Lands Of Other Nations.

சங்கீதம் 111-6 - Psalms 111-6ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

7 - அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

English:- The Works Of His Hands Are Faithful And Just; All His Precepts Are Trustworthy.

சங்கீதம் 111-7 - Psalms 111-7அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

8 - அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.

English:- They Are Steadfast For Ever And Ever, Done In Faithfulness And Uprightness.

சங்கீதம் 111-8 - Psalms 111-8அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.

9 - அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

English:- He Provided Redemption For His People; He Ordained His Covenant Forever- Holy And Awesome Is His Name.

சங்கீதம் 111-9 - Psalms 111-9அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

10 - கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

English:- The Fear Of The Lord Is The Beginning Of Wisdom; All Who Follow His Precepts Have Good Understanding. To Him Belongs Eternal Praise.


Previous Chapter Next Chapter