சங்கீதம் 109 – Psalms 109


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 109 – Read Holy Bible Book Of Psalms Chapter 109 In Tamil With English Reference


1 - நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.

English:- O God, Whom I Praise, Do Not Remain Silent,

சங்கீதம் 109-1 - Psalms 109-1நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.

2 - துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.

English:- For Wicked And Deceitful Men Have Opened Their Mouths Against Me; They Have Spoken Against Me With Lying Tongues.


3 - பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.

English:- With Words Of Hatred They Surround Me; They Attack Me Without Cause.

சங்கீதம் 109-3 - Psalms 109-3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.

4 - என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

English:- In Return For My Friendship They Accuse Me, But I Am A Man Of Prayer.

சங்கீதம் 109-4 - Psalms 109-4என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

5 - நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

English:- They Repay Me Evil For Good, And Hatred For My Friendship.

சங்கீதம் 109-5 - Psalms 109-5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.

6 - அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.

English:- Appoint An Evil Man To Oppose Him; Let An Accuser Stand At His Right Hand.

சங்கீதம் 109-6 - Psalms 109-6அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.

7 - அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.

English:- When He Is Tried, Let Him Be Found Guilty, And May His Prayers Condemn Him.

சங்கீதம் 109-7 - Psalms 109-7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.

8 - அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.

English:- May His Days Be Few; May Another Take His Place Of Leadership.

சங்கீதம் 109-8 - Psalms 109-8அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.

9 - அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.

English:- May His Children Be Fatherless And His Wife A Widow.

சங்கீதம் 109-9 - Psalms 109-9அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.

10 - அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

English:- May His Children Be Wandering Beggars; May They Be Driven From Their Ruined Homes.


11 - கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.

English:- May A Creditor Seize All He Has; May Strangers Plunder The Fruits Of His Labor.

சங்கீதம் 109-11 - Psalms 109-11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.

12 - அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.

English:- May No One Extend Kindness To Him Or Take Pity On His Fatherless Children.

சங்கீதம் 109-12 - Psalms 109-12அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.

13 - அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

English:- May His Descendants Be Cut Off, Their Names Blotted Out From The Next Generation.

சங்கீதம் 109-13 - Psalms 109-13அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

14 - அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.

English:- May The Iniquity Of His Fathers Be Remembered Before The Lord ; May The Sin Of His Mother Never Be Blotted Out.

சங்கீதம் 109-14 - Psalms 109-14அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.

15 - அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.

English:- May Their Sins Always Remain Before The Lord , That He May Cut Off The Memory Of Them From The Earth.

சங்கீதம் 109-15 - Psalms 109-15அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.

16 - அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

English:- For He Never Thought Of Doing A Kindness, But Hounded To Death The Poor And The Needy And The Brokenhearted.

சங்கீதம் 109-16 - Psalms 109-16அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

17 - சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.

English:- He Loved To Pronounce A Curse- May It Come On Him; He Found No Pleasure In Blessing- May It Be Far From Him.

சங்கீதம் 109-17 - Psalms 109-17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.

18 - சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

English:- He Wore Cursing As His Garment; It Entered Into His Body Like Water, Into His Bones Like Oil.

சங்கீதம் 109-18 - Psalms 109-18சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.

19 - அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.

English:- May It Be Like A Cloak Wrapped About Him, Like A Belt Tied Forever Around Him.

சங்கீதம் 109-19 - Psalms 109-19அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக.

20 - இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன்.

English:- May This Be The Lord 'S Payment To My Accusers, To Those Who Speak Evil Of Me.


21 - ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

English:- But You, O Sovereign Lord , Deal Well With Me For Your Name's Sake; Out Of The Goodness Of Your Love, Deliver Me.

சங்கீதம் 109-21 - Psalms 109-21ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

22 - நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.

English:- For I Am Poor And Needy, And My Heart Is Wounded Within Me.

சங்கீதம் 109-22 - Psalms 109-22நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.

23 - சாயும் நிழலைப்போல் அகன்று போனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

English:- I Fade Away Like An Evening Shadow; I Am Shaken Off Like A Locust.

சங்கீதம் 109-23 - Psalms 109-23சாயும் நிழலைப்போல் அகன்று போனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.

24 - உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.

English:- My Knees Give Way From Fasting; My Body Is Thin And Gaunt.

சங்கீதம் 109-24 - Psalms 109-24உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.

25 - நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.

English:- I Am An Object Of Scorn To My Accusers; When They See Me, They Shake Their Heads.

சங்கீதம் 109-25 - Psalms 109-25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.

26 - என் தேவனாகிய கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.

English:- Help Me, O Lord My God; Save Me In Accordance With Your Love.

சங்கீதம் 109-26 - Psalms 109-26என் தேவனாகிய கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.

27 - இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.

English:- Let Them Know That It Is Your Hand, That You, O Lord , Have Done It.

சங்கீதம் 109-27 - Psalms 109-27இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.

28 - அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.

English:- They May Curse, But You Will Bless; When They Attack They Will Be Put To Shame, But Your Servant Will Rejoice.

சங்கீதம் 109-28 - Psalms 109-28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.

29 - என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

English:- My Accusers Will Be Clothed With Disgrace And Wrapped In Shame As In A Cloak.

சங்கீதம் 109-29 - Psalms 109-29என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

30 - கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

English:- With My Mouth I Will Greatly Extol The Lord ; In The Great Throng I Will Praise Him.

சங்கீதம் 109-30 - Psalms 109-30கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.

31 - ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.

English:- For He Stands At The Right Hand Of The Needy One, To Save His Life From Those Who Condemn Him.

சங்கீதம் 109-31 - Psalms 109-31ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.


Previous Chapter Next Chapter