நீதிமொழிகள் 1 – Proverbs 1


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Proverbs Chapter 1 In Tamil With English Reference


1 - தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

English:- The Proverbs Of Solomon Son Of David, King Of Israel:

நீதிமொழிகள் 1-1 - Proverbs 1-1தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

2 - இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

English:- For Attaining Wisdom And Discipline; For Understanding Words Of Insight;


3 - விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

English:- For Acquiring A Disciplined And Prudent Life, Doing What Is Right And Just And Fair;

நீதிமொழிகள் 1-3 - Proverbs 1-3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

4 - இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.

English:- For Giving Prudence To The Simple, Knowledge And Discretion To The Young-

நீதிமொழிகள் 1-4 - Proverbs 1-4இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.

5 - புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

English:- Let The Wise Listen And Add To Their Learning, And Let The Discerning Get Guidance-

நீதிமொழிகள் 1-5 - Proverbs 1-5புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

6 - நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.

English:- For Understanding Proverbs And Parables, The Sayings And Riddles Of The Wise.

நீதிமொழிகள் 1-6 - Proverbs 1-6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.

7 - கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

English:- The Fear Of The Lord Is The Beginning Of Knowledge, But Fools Despise Wisdom And Discipline. Exhortations To Embrace Wisdom

நீதிமொழிகள் 1-7 - Proverbs 1-7கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

8 - என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

English:- Listen, My Son, To Your Father's Instruction And Do Not Forsake Your Mother's Teaching.

நீதிமொழிகள் 1-8 - Proverbs 1-8என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

9 - அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.

English:- They Will Be A Garland To Grace Your Head And A Chain To Adorn Your Neck.

நீதிமொழிகள் 1-9 - Proverbs 1-9அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.

10 - என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.

English:- My Son, If Sinners Entice You, Do Not Give In To Them.


11 - எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

English:- If They Say, "Come Along With Us; Let's Lie In Wait For Someone's Blood, Let's Waylay Some Harmless Soul;

நீதிமொழிகள் 1-11 - Proverbs 1-11எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

12 - பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

English:- Let's Swallow Them Alive, Like The Grave, And Whole, Like Those Who Go Down To The Pit;

நீதிமொழிகள் 1-12 - Proverbs 1-12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

13 - விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.

English:- We Will Get All Sorts Of Valuable Things And Fill Our Houses With Plunder;

நீதிமொழிகள் 1-13 - Proverbs 1-13விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.

14 - எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;

English:- Throw In Your Lot With Us, And We Will Share A Common Purse"-

நீதிமொழிகள் 1-14 - Proverbs 1-14எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;

15 - என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

English:- My Son, Do Not Go Along With Them, Do Not Set Foot On Their Paths;

நீதிமொழிகள் 1-15 - Proverbs 1-15என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

16 - அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.

English:- For Their Feet Rush Into Sin, They Are Swift To Shed Blood.

நீதிமொழிகள் 1-16 - Proverbs 1-16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.

17 - எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.

English:- How Useless To Spread A Net In Full View Of All The Birds!

நீதிமொழிகள் 1-17 - Proverbs 1-17எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.

18 - இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.

English:- These Men Lie In Wait For Their Own Blood; They Waylay Only Themselves!

நீதிமொழிகள் 1-18 - Proverbs 1-18இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.

19 - பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.

English:- Such Is The End Of All Who Go After Ill-gotten Gain; It Takes Away The Lives Of Those Who Get It.

நீதிமொழிகள் 1-19 - Proverbs 1-19பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.

20 - ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.

English:- Wisdom Calls Aloud In The Street, She Raises Her Voice In The Public Squares;


21 - அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:

English:- At The Head Of The Noisy Streets She Cries Out, In The Gateways Of The City She Makes Her Speech:

நீதிமொழிகள் 1-21 - Proverbs 1-21அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:

22 - பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

English:- "How Long Will You Simple Ones Love Your Simple Ways? How Long Will Mockers Delight In Mockery And Fools Hate Knowledge?

நீதிமொழிகள் 1-22 - Proverbs 1-22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

23 - என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

English:- If You Had Responded To My Rebuke, I Would Have Poured Out My Heart To You And Made My Thoughts Known To You.

நீதிமொழிகள் 1-23 - Proverbs 1-23என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

24 - நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

English:- But Since You Rejected Me When I Called And No One Gave Heed When I Stretched Out My Hand,

நீதிமொழிகள் 1-24 - Proverbs 1-24நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

25 - என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

English:- Since You Ignored All My Advice And Would Not Accept My Rebuke,

நீதிமொழிகள் 1-25 - Proverbs 1-25என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

26 - ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.

English:- I In Turn Will Laugh At Your Disaster; I Will Mock When Calamity Overtakes You-

நீதிமொழிகள் 1-26 - Proverbs 1-26ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.

27 - நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.

English:- When Calamity Overtakes You Like A Storm, When Disaster Sweeps Over You Like A Whirlwind, When Distress And Trouble Overwhelm You.

நீதிமொழிகள் 1-27 - Proverbs 1-27நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.

28 - அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

English:- "Then They Will Call To Me But I Will Not Answer; They Will Look For Me But Will Not Find Me.

நீதிமொழிகள் 1-28 - Proverbs 1-28அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

29 - அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.

English:- Since They Hated Knowledge And Did Not Choose To Fear The Lord ,

நீதிமொழிகள் 1-29 - Proverbs 1-29அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.

30 - என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.

English:- Since They Would Not Accept My Advice And Spurned My Rebuke,

நீதிமொழிகள் 1-30 - Proverbs 1-30என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.

31 - ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.

English:- They Will Eat The Fruit Of Their Ways And Be Filled With The Fruit Of Their Schemes.

நீதிமொழிகள் 1-31 - Proverbs 1-31ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.

32 - பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.

English:- For The Waywardness Of The Simple Will Kill Them, And The Complacency Of Fools Will Destroy Them;

நீதிமொழிகள் 1-32 - Proverbs 1-32பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.

33 - எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

English:- But Whoever Listens To Me Will Live In Safety And Be At Ease, Without Fear Of Harm."

நீதிமொழிகள் 1-33 - Proverbs 1-33எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.


Previous Chapter Next Chapter