எண்ணாகமம் 25 – Numbers 25


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் எண்ணாகமம் அதிகாரம் 25 – Read Holy Bible Book Of Numbers Chapter 25 In Tamil With English Reference


1 - இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

English:- While Israel Was Staying In Shittim, The Men Began To Indulge In Sexual Immorality With Moabite Women,

எண்ணாகமம் 25-1 - Numbers 25-1இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.

2 - அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துக்கொண்டார்கள்.

English:- Who Invited Them To The Sacrifices To Their Gods. The People Ate And Bowed Down Before These Gods.


3 - இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

English:- So Israel Joined In Worshiping The Baal Of Peor. And The Lord 'S Anger Burned Against Them.

எண்ணாகமம் 25-3 - Numbers 25-3இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

4 - கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.

English:- The Lord Said To Moses, "Take All The Leaders Of These People, Kill Them And Expose Them In Broad Daylight Before The Lord , So That The Lord 'S Fierce Anger May Turn Away From Israel."

எண்ணாகமம் 25-4 - Numbers 25-4கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார்.

5 - அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.

English:- So Moses Said To Israel's Judges, "Each Of You Must Put To Death Those Of Your Men Who Have Joined In Worshiping The Baal Of Peor."

எண்ணாகமம் 25-5 - Numbers 25-5அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான்.

6 - அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான்.

English:- Then An Israelite Man Brought To His Family A Midianite Woman Right Before The Eyes Of Moses And The Whole Assembly Of Israel While They Were Weeping At The Entrance To The Tent Of Meeting.

எண்ணாகமம் 25-6 - Numbers 25-6அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான்.

7 - அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,

English:- When Phinehas Son Of Eleazar, The Son Of Aaron, The Priest, Saw This, He Left The Assembly, Took A Spear In His Hand

எண்ணாகமம் 25-7 - Numbers 25-7அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து,

8 - இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.

English:- And Followed The Israelite Into The Tent. He Drove The Spear Through Both Of Them-through The Israelite And Into The Woman's Body. Then The Plague Against The Israelites Was Stopped;

எண்ணாகமம் 25-8 - Numbers 25-8இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.

9 - அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.

English:- But Those Who Died In The Plague Numbered ,.

எண்ணாகமம் 25-9 - Numbers 25-9அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.

10 - கர்த்தர் மோசேயை நோக்கி:

English:- The Lord Said To Moses,


11 - நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

English:- "Phinehas Son Of Eleazar, The Son Of Aaron, The Priest, Has Turned My Anger Away From The Israelites; For He Was As Zealous As I Am For My Honor Among Them, So That In My Zeal I Did Not Put An End To Them.

எண்ணாகமம் 25-11 - Numbers 25-11நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

12 - ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.

English:- Therefore Tell Him I Am Making My Covenant Of Peace With Him.

எண்ணாகமம் 25-12 - Numbers 25-12ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன்.

13 - அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

English:- He And His Descendants Will Have A Covenant Of A Lasting Priesthood, Because He Was Zealous For The Honor Of His God And Made Atonement For The Israelites."

எண்ணாகமம் 25-13 - Numbers 25-13அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

14 - மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.

English:- The Name Of The Israelite Who Was Killed With The Midianite Woman Was Zimri Son Of Salu, The Leader Of A Simeonite Family.

எண்ணாகமம் 25-14 - Numbers 25-14மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான்.

15 - குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.

English:- And The Name Of The Midianite Woman Who Was Put To Death Was Cozbi Daughter Of Zur, A Tribal Chief Of A Midianite Family.

எண்ணாகமம் 25-15 - Numbers 25-15குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.

16 - கர்த்தர் மோசேயை நோக்கி:

English:- The Lord Said To Moses,

எண்ணாகமம் 25-16 - Numbers 25-16கர்த்தர் மோசேயை நோக்கி:

17 - மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.

English:- "Treat The Midianites As Enemies And Kill Them,

எண்ணாகமம் 25-17 - Numbers 25-17மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள்.

18 - பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.

English:- Because They Treated You As Enemies When They Deceived You In The Affair Of Peor And Their Sister Cozbi, The Daughter Of A Midianite Leader, The Woman Who Was Killed When The Plague Came As A Result Of Peor."

எண்ணாகமம் 25-18 - Numbers 25-18பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.


Previous Chapter Next Chapter