பரிசுத்த வேதாகமம் நாகூம் அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Nahum Chapter 1 In Tamil With English Reference
1 - நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.
English:- Chapter1 An Oracle Concerning Nineveh. The Book Of The Vision Of Nahum The Elkoshite.
2 - கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
English:- The Lord Is A Jealous And Avenging God; The Lord Takes Vengeance And Is Filled With Wrath. The Lord Takes Vengeance On His Foes And Maintains His Wrath Against His Enemies.
3 - கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது.
English:- The Lord Is Slow To Anger And Great In Power; The Lord Will Not Leave The Guilty Unpunished. His Way Is In The Whirlwind And The Storm, And Clouds Are The Dust Of His Feet.
4 - அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார். பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
English:- He Rebukes The Sea And Dries It Up; He Makes All The Rivers Run Dry. Bashan And Carmel Wither And The Blossoms Of Lebanon Fade.
5 - அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.
English:- The Mountains Quake Before Him And The Hills Melt Away. The Earth Trembles At His Presence, The World And All Who Live In It.
6 - அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.
English:- Who Can Withstand His Indignation? Who Can Endure His Fierce Anger? His Wrath Is Poured Out Like Fire; The Rocks Are Shattered Before Him.
7 - கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
English:- The Lord Is Good, A Refuge In Times Of Trouble. He Cares For Those Who Trust In Him,
8 - ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.
English:- But With An Overwhelming Flood He Will Make An End Of Nineveh ; He Will Pursue His Foes Into Darkness.
9 - நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.
English:- Whatever They Plot Against The Lord He Will Bring To An End; Trouble Will Not Come A Second Time.
10 - அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.
English:- They Will Be Entangled Among Thorns And Drunk From Their Wine; They Will Be Consumed Like Dry Stubble.
11 - கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.
English:- From You, O Nineveh , Has One Come Forth Who Plots Evil Against The Lord And Counsels Wickedness.
12 - கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.
English:- This Is What The Lord Says: "Although They Have Allies And Are Numerous, They Will Be Cut Off And Pass Away. Although I Have Afflicted You, O Judah , I Will Afflict You No More.
13 - இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
English:- Now I Will Break Their Yoke From Your Neck And Tear Your Shackles Away."
14 - உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
English:- The Lord Has Given A Command Concerning You, Nineveh : "You Will Have No Descendants To Bear Your Name. I Will Destroy The Carved Images And Cast Idols That Are In The Temple Of Your Gods. I Will Prepare Your Grave, For You Are Vile."
15 - இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.
English:- Look, There On The Mountains, The Feet Of One Who Brings Good News, Who Proclaims Peace! Celebrate Your Festivals, O Judah, And Fulfill Your Vows. No More Will The Wicked Invade You; They Will Be Completely Destroyed.