மீகா 1 – Micah 1


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் மீகா அதிகாரம் 1 – Read Holy Bible Book Of Micah Chapter 1 In Tamil With English Reference


1 - யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.

English:- Chapter1 The Word Of The Lord That Came To Micah Of Moresheth During The Reigns Of Jotham, Ahaz And Hezekiah, Kings Of Judah-the Vision He Saw Concerning Samaria And Jerusalem.

மீகா 1-1 - Micah 1-1யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.

2 - சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.

English:- Hear, O Peoples, All Of You, Listen, O Earth And All Who Are In It, That The Sovereign Lord May Witness Against You, The Lord From His Holy Temple.


3 - இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.

English:- Look! The Lord Is Coming From His Dwelling Place; He Comes Down And Treads The High Places Of The Earth.

மீகா 1-3 - Micah 1-3இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.

4 - மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

English:- The Mountains Melt Beneath Him And The Valleys Split Apart, Like Wax Before The Fire, Like Water Rushing Down A Slope.

மீகா 1-4 - Micah 1-4மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

5 - இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்கு காரணமென்ன? எருசலேம் அல்லவோ?

English:- All This Is Because Of Jacob's Transgression, Because Of The Sins Of The House Of Israel. What Is Jacob's Transgression? Is It Not Samaria? What Is Judah's High Place? Is It Not Jerusalem?

மீகா 1-5 - Micah 1-5இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்கு காரணமென்ன? எருசலேம் அல்லவோ?

6 - ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.

English:- "Therefore I Will Make Samaria A Heap Of Rubble, A Place For Planting Vineyards. I Will Pour Her Stones Into The Valley And Lay Bare Her Foundations.

மீகா 1-6 - Micah 1-6ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழப்பண்ணி அதின் அஸ்திபாரங்களைத்திறந்து வைப்பேன்.

7 - அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.

English:- All Her Idols Will Be Broken To Pieces; All Her Temple Gifts Will Be Burned With Fire; I Will Destroy All Her Images. Since She Gathered Her Gifts From The Wages Of Prostitutes, As The Wages Of Prostitutes They Will Again Be Used."

மீகா 1-7 - Micah 1-7அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.

8 - இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

English:- Because Of This I Will Weep And Wail; I Will Go About Barefoot And Naked. I Will Howl Like A Jackal And Moan Like An Owl.

மீகா 1-8 - Micah 1-8இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன்.

9 - அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.

English:- For Her Wound Is Incurable; It Has Come To Judah. It Has Reached The Very Gate Of My People, Even To Jerusalem Itself.

மீகா 1-9 - Micah 1-9அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.

10 - அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள். அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.

English:- Tell It Not In Gath ; Weep Not At All. In Beth Ophrah Roll In The Dust.


11 - சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.

English:- Pass On In Nakedness And Shame, You Who Live In Shaphir. Those Who Live In Zaanan Will Not Come Out. Beth Ezel Is In Mourning; Its Protection Is Taken From You.

மீகா 1-11 - Micah 1-11சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.

12 - மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

English:- Those Who Live In Maroth Writhe In Pain, Waiting For Relief, Because Disaster Has Come From The Lord , Even To The Gate Of Jerusalem.

மீகா 1-12 - Micah 1-12மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

13 - லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.

English:- You Who Live In Lachish, Harness The Team To The Chariot. You Were The Beginning Of Sin To The Daughter Of Zion, For The Transgressions Of Israel Were Found In You.

மீகா 1-13 - Micah 1-13லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.

14 - ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.

English:- Therefore You Will Give Parting Gifts To Moresheth Gath. The Town Of Aczib Will Prove Deceptive To The Kings Of Israel.

மீகா 1-14 - Micah 1-14ஆகையால் மோர்ஷேக்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.

15 - மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.

English:- I Will Bring A Conqueror Against You Who Live In Mareshah. He Who Is The Glory Of Israel Will Come To Adullam.

மீகா 1-15 - Micah 1-15மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.

16 - உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.

English:- Shave Your Heads In Mourning For The Children In Whom You Delight; Make Yourselves As Bald As The Vulture, For They Will Go From You Into Exile.

மீகா 1-16 - Micah 1-16உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.


Previous Chapter Next Chapter