லேவியராகமம் 9 – Leviticus 9


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் லேவியராகமம் அதிகாரம் 9 – Read Holy Bible Book Of Leviticus Chapter 9 In Tamil With English Reference


1 - எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,

English:- On The Eighth Day Moses Summoned Aaron And His Sons And The Elders Of Israel.

லேவியராகமம் 9-1 - Leviticus 9-1எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,

2 - ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.

English:- He Said To Aaron, "Take A Bull Calf For Your Sin Offering And A Ram For Your Burnt Offering, Both Without Defect, And Present Them Before The Lord .


3 - மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,

English:- Then Say To The Israelites: 'Take A Male Goat For A Sin Offering, A Calf And A Lamb-both A Year Old And Without Defect-for A Burnt Offering,

லேவியராகமம் 9-3 - Leviticus 9-3மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,

4 - சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.

English:- And An Ox And A Ram For A Fellowship Offering To Sacrifice Before The Lord , Together With A Grain Offering Mixed With Oil. For Today The Lord Will Appear To You.' "

லேவியராகமம் 9-4 - Leviticus 9-4சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.

5 - மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.

English:- They Took The Things Moses Commanded To The Front Of The Tent Of Meeting, And The Entire Assembly Came Near And Stood Before The Lord .

லேவியராகமம் 9-5 - Leviticus 9-5மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.

6 - அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.

English:- Then Moses Said, "This Is What The Lord Has Commanded You To Do, So That The Glory Of The Lord May Appear To You."

லேவியராகமம் 9-6 - Leviticus 9-6அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.

7 - மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.

English:- Moses Said To Aaron, "Come To The Altar And Sacrifice Your Sin Offering And Your Burnt Offering And Make Atonement For Yourself And The People; Sacrifice The Offering That Is For The People And Make Atonement For Them, As The Lord Has Commanded."

லேவியராகமம் 9-7 - Leviticus 9-7மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.

8 - அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரண பலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.

English:- So Aaron Came To The Altar And Slaughtered The Calf As A Sin Offering For Himself.

லேவியராகமம் 9-8 - Leviticus 9-8அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரண பலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.

9 - ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

English:- His Sons Brought The Blood To Him, And He Dipped His Finger Into The Blood And Put It On The Horns Of The Altar; The Rest Of The Blood He Poured Out At The Base Of The Altar.

லேவியராகமம் 9-9 - Leviticus 9-9ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

10 - பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,

English:- On The Altar He Burned The Fat, The Kidneys And The Covering Of The Liver From The Sin Offering, As The Lord Commanded Moses;


11 - மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.

English:- The Flesh And The Hide He Burned Up Outside The Camp.

லேவியராகமம் 9-11 - Leviticus 9-11மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.

12 - பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

English:- Then He Slaughtered The Burnt Offering. His Sons Handed Him The Blood, And He Sprinkled It Against The Altar On All Sides.

லேவியராகமம் 9-12 - Leviticus 9-12பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

13 - சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,

English:- They Handed Him The Burnt Offering Piece By Piece, Including The Head, And He Burned Them On The Altar.

லேவியராகமம் 9-13 - Leviticus 9-13சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,

14 - குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.

English:- He Washed The Inner Parts And The Legs And Burned Them On Top Of The Burnt Offering On The Altar.

லேவியராகமம் 9-14 - Leviticus 9-14குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.

15 - பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப்பாவநிவாரணபலியாக்கி,

English:- Aaron Then Brought The Offering That Was For The People. He Took The Goat For The People's Sin Offering And Slaughtered It And Offered It For A Sin Offering As He Did With The First One.

லேவியராகமம் 9-15 - Leviticus 9-15பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப்பாவநிவாரணபலியாக்கி,

16 - சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,

English:- He Brought The Burnt Offering And Offered It In The Prescribed Way.

லேவியராகமம் 9-16 - Leviticus 9-16சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,

17 - போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.

English:- He Also Brought The Grain Offering, Took A Handful Of It And Burned It On The Altar In Addition To The Morning's Burnt Offering.

லேவியராகமம் 9-17 - Leviticus 9-17போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.

18 - பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

English:- He Slaughtered The Ox And The Ram As The Fellowship Offering For The People. His Sons Handed Him The Blood, And He Sprinkled It Against The Altar On All Sides.

லேவியராகமம் 9-18 - Leviticus 9-18பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

19 - காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,

English:- But The Fat Portions Of The Ox And The Ram-the Fat Tail, The Layer Of Fat, The Kidneys And The Covering Of The Liver-

லேவியராகமம் 9-19 - Leviticus 9-19காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,

20 - கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.

English:- These They Laid On The Breasts, And Then Aaron Burned The Fat On The Altar.


21 - மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.

English:- Aaron Waved The Breasts And The Right Thigh Before The Lord As A Wave Offering, As Moses Commanded.

லேவியராகமம் 9-21 - Leviticus 9-21மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.

22 - பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.

English:- Then Aaron Lifted His Hands Toward The People And Blessed Them. And Having Sacrificed The Sin Offering, The Burnt Offering And The Fellowship Offering, He Stepped Down.

லேவியராகமம் 9-22 - Leviticus 9-22பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.

23 - பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.

English:- Moses And Aaron Then Went Into The Tent Of Meeting. When They Came Out, They Blessed The People; And The Glory Of The Lord Appeared To All The People.

லேவியராகமம் 9-23 - Leviticus 9-23பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.

24 - அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.

English:- Fire Came Out From The Presence Of The Lord And Consumed The Burnt Offering And The Fat Portions On The Altar. And When All The People Saw It, They Shouted For Joy And Fell Facedown.

லேவியராகமம் 9-24 - Leviticus 9-24அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.


Previous Chapter Next Chapter