யோபு 38 – Job 38


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 38 – Read Holy Bible Book Of Job Chapter 38 In Tamil With English Reference


1 - அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:

English:- Then The Lord Answered Job Out Of The Storm. He Said:

யோபு 38-1 - Job 38-1அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக:

2 - அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?

English:- "Who Is This That Darkens My Counsel With Words Without Knowledge?


3 - இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.

English:- Brace Yourself Like A Man; I Will Question You, And You Shall Answer Me.

யோபு 38-3 - Job 38-3இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.

4 - நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

English:- "Where Were You When I Laid The Earth's Foundation? Tell Me, If You Understand.

யோபு 38-4 - Job 38-4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

5 - அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

English:- Who Marked Off Its Dimensions? Surely You Know! Who Stretched A Measuring Line Across It?

யோபு 38-5 - Job 38-5அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

6 - அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?

English:- On What Were Its Footings Set, Or Who Laid Its Cornerstone-

யோபு 38-6 - Job 38-6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?

7 - அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

English:- While The Morning Stars Sang Together And All The Angels Shouted For Joy?

யோபு 38-7 - Job 38-7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

8 - கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

English:- "Who Shut Up The Sea Behind Doors When It Burst Forth From The Womb,

யோபு 38-8 - Job 38-8கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

9 - மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,

English:- When I Made The Clouds Its Garment And Wrapped It In Thick Darkness,

யோபு 38-9 - Job 38-9மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,

10 - நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:

English:- When I Fixed Limits For It And Set Its Doors And Bars In Place,


11 - இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

English:- When I Said, 'This Far You May Come And No Farther; Here Is Where Your Proud Waves Halt'?

யோபு 38-11 - Job 38-11இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?

12 - துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,

English:- "Have You Ever Given Orders To The Morning, Or Shown The Dawn Its Place,

யோபு 38-12 - Job 38-12துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,

13 - உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?

English:- That It Might Take The Earth By The Edges And Shake The Wicked Out Of It?

யோபு 38-13 - Job 38-13உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ?

14 - பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.

English:- The Earth Takes Shape Like Clay Under A Seal; Its Features Stand Out Like Those Of A Garment.

யோபு 38-14 - Job 38-14பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும்.

15 - துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.

English:- The Wicked Are Denied Their Light, And Their Upraised Arm Is Broken.

யோபு 38-15 - Job 38-15துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.

16 - நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?

English:- "Have You Journeyed To The Springs Of The Sea Or Walked In The Recesses Of The Deep?

யோபு 38-16 - Job 38-16நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?

17 - மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

English:- Have The Gates Of Death Been Shown To You? Have You Seen The Gates Of The Shadow Of Death ?

யோபு 38-17 - Job 38-17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

18 - நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.

English:- Have You Comprehended The Vast Expanses Of The Earth? Tell Me, If You Know All This.

யோபு 38-18 - Job 38-18நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.

19 - வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?

English:- "What Is The Way To The Abode Of Light? And Where Does Darkness Reside?

யோபு 38-19 - Job 38-19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?

20 - அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

English:- Can You Take Them To Their Places? Do You Know The Paths To Their Dwellings?


21 - நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?

English:- Surely You Know, For You Were Already Born! You Have Lived So Many Years!

யோபு 38-21 - Job 38-21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?

22 - உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?

English:- "Have You Entered The Storehouses Of The Snow Or Seen The Storehouses Of The Hail,

யோபு 38-22 - Job 38-22உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ?

23 - ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

English:- Which I Reserve For Times Of Trouble, For Days Of War And Battle?

யோபு 38-23 - Job 38-23ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.

24 - வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?

English:- What Is The Way To The Place Where The Lightning Is Dispersed, Or The Place Where The East Winds Are Scattered Over The Earth?

யோபு 38-24 - Job 38-24வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?

25 - பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,

English:- Who Cuts A Channel For The Torrents Of Rain, And A Path For The Thunderstorm,

யோபு 38-25 - Job 38-25பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,

26 - பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

English:- To Water A Land Where No Man Lives, A Desert With No One In It,

யோபு 38-26 - Job 38-26பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

27 - வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

English:- To Satisfy A Desolate Wasteland And Make It Sprout With Grass?

யோபு 38-27 - Job 38-27வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

28 - மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?

English:- Does The Rain Have A Father? Who Fathers The Drops Of Dew?

யோபு 38-28 - Job 38-28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?

29 - உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?

English:- From Whose Womb Comes The Ice? Who Gives Birth To The Frost From The Heavens

யோபு 38-29 - Job 38-29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?

30 - ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.

English:- When The Waters Become Hard As Stone, When The Surface Of The Deep Is Frozen?

யோபு 38-30 - Job 38-30ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.

31 - அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?

English:- "Can You Bind The Beautiful Pleiades? Can You Loose The Cords Of Orion?

யோபு 38-31 - Job 38-31அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?

32 - இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

English:- Can You Bring Forth The Constellations In Their Seasons Or Lead Out The Bear With Its Cubs?

யோபு 38-32 - Job 38-32இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

33 - வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

English:- Do You Know The Laws Of The Heavens? Can You Set Up God's Dominion Over The Earth?

யோபு 38-33 - Job 38-33வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

34 - ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?

English:- "Can You Raise Your Voice To The Clouds And Cover Yourself With A Flood Of Water?

யோபு 38-34 - Job 38-34ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?

35 - நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?

English:- Do You Send The Lightning Bolts On Their Way? Do They Report To You, 'Here We Are'?

யோபு 38-35 - Job 38-35நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?

36 - அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

English:- Who Endowed The Heart With Wisdom Or Gave Understanding To The Mind ?

யோபு 38-36 - Job 38-36அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?

37 - ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?

English:- Who Has The Wisdom To Count The Clouds? Who Can Tip Over The Water Jars Of The Heavens

யோபு 38-37 - Job 38-37ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?

38 - தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?

English:- When The Dust Becomes Hard And The Clods Of Earth Stick Together?

யோபு 38-38 - Job 38-38தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?

39 - நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

English:- "Do You Hunt The Prey For The Lioness And Satisfy The Hunger Of The Lions

யோபு 38-39 - Job 38-39நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

40 - சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

English:- When They Crouch In Their Dens Or Lie In Wait In A Thicket?

யோபு 38-40 - Job 38-40சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

41 - காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

English:- Who Provides Food For The Raven When Its Young Cry Out To God And Wander About For Lack Of Food?

யோபு 38-41 - Job 38-41காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?


Previous Chapter Next Chapter