ஏசாயா 15 – Isaiah 15


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 15 – Read Holy Bible Book Of Isaiah Chapter 15 In Tamil With English Reference


1 - மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

English:- An Oracle Concerning Moab: Ar In Moab Is Ruined, Destroyed In A Night! Kir In Moab Is Ruined, Destroyed In A Night!

ஏசாயா 15-1 - Isaiah 15-1மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

2 - அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

English:- Dibon Goes Up To Its Temple, To Its High Places To Weep; Moab Wails Over Nebo And Medeba. Every Head Is Shaved And Every Beard Cut Off.


3 - அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

English:- In The Streets They Wear Sackcloth; On The Roofs And In The Public Squares They All Wail, Prostrate With Weeping.

ஏசாயா 15-3 - Isaiah 15-3அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

4 - எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

English:- Heshbon And Elealeh Cry Out, Their Voices Are Heard All The Way To Jahaz. Therefore The Armed Men Of Moab Cry Out, And Their Hearts Are Faint.

ஏசாயா 15-4 - Isaiah 15-4எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

5 - என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.

English:- My Heart Cries Out Over Moab; Her Fugitives Flee As Far As Zoar, As Far As Eglath Shelishiyah. They Go Up The Way To Luhith, Weeping As They Go; On The Road To Horonaim They Lament Their Destruction.

ஏசாயா 15-5 - Isaiah 15-5என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.

6 - நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற்போகிறது.

English:- The Waters Of Nimrim Are Dried Up And The Grass Is Withered; The Vegetation Is Gone And Nothing Green Is Left.

ஏசாயா 15-6 - Isaiah 15-6நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற்போகிறது.

7 - ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.

English:- So The Wealth They Have Acquired And Stored Up They Carry Away Over The Ravine Of The Poplars.

ஏசாயா 15-7 - Isaiah 15-7ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.

8 - கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

English:- Their Outcry Echoes Along The Border Of Moab; Their Wailing Reaches As Far As Eglaim, Their Lamentation As Far As Beer Elim.

ஏசாயா 15-8 - Isaiah 15-8கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும்.

9 - தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.

English:- Dimon's Waters Are Full Of Blood, But I Will Bring Still More Upon Dimon - A Lion Upon The Fugitives Of Moab And Upon Those Who Remain In The Land.

ஏசாயா 15-9 - Isaiah 15-9தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.


Previous Chapter Next Chapter