யாத்திராகமம் 20 – Exodus 20


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யாத்திராகமம் அதிகாரம் 20 – Read Holy Bible Book Of Exodus Chapter 20 In Tamil With English Reference


1 - தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

English:- And God Spoke All These Words:

யாத்திராகமம் 20-1 - Exodus 20-1தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

2 - உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

English:- "I Am The Lord Your God, Who Brought You Out Of Egypt, Out Of The Land Of Slavery.


3 - என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

English:- "You Shall Have No Other Gods Before Me.

யாத்திராகமம் 20-3 - Exodus 20-3என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4 - மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

English:- "You Shall Not Make For Yourself An Idol In The Form Of Anything In Heaven Above Or On The Earth Beneath Or In The Waters Below.

யாத்திராகமம் 20-4 - Exodus 20-4மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5 - நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

English:- You Shall Not Bow Down To Them Or Worship Them; For I, The Lord Your God, Am A Jealous God, Punishing The Children For The Sin Of The Fathers To The Third And Fourth Generation Of Those Who Hate Me,

யாத்திராகமம் 20-5 - Exodus 20-5நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

6 - என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

English:- But Showing Love To A Thousand [Generations] Of Those Who Love Me And Keep My Commandments.

யாத்திராகமம் 20-6 - Exodus 20-6என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.

7 - உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

English:- "You Shall Not Misuse The Name Of The Lord Your God, For The Lord Will Not Hold Anyone Guiltless Who Misuses His Name.

யாத்திராகமம் 20-7 - Exodus 20-7உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

8 - ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

English:- "Remember The Sabbath Day By Keeping It Holy.

யாத்திராகமம் 20-8 - Exodus 20-8ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

9 - ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

English:- Six Days You Shall Labor And Do All Your Work,

யாத்திராகமம் 20-9 - Exodus 20-9ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

10 - ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

English:- But The Seventh Day Is A Sabbath To The Lord Your God. On It You Shall Not Do Any Work, Neither You, Nor Your Son Or Daughter, Nor Your Manservant Or Maidservant, Nor Your Animals, Nor The Alien Within Your Gates.


11 - கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

English:- For In Six Days The Lord Made The Heavens And The Earth, The Sea, And All That Is In Them, But He Rested On The Seventh Day. Therefore The Lord Blessed The Sabbath Day And Made It Holy.

யாத்திராகமம் 20-11 - Exodus 20-11கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

12 - உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

English:- "Honor Your Father And Your Mother, So That You May Live Long In The Land The Lord Your God Is Giving You.

யாத்திராகமம் 20-12 - Exodus 20-12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

13 - கொலை செய்யாதிருப்பாயாக.

English:- "You Shall Not Murder.

யாத்திராகமம் 20-13 - Exodus 20-13கொலை செய்யாதிருப்பாயாக.

14 - விபசாரம் செய்யாதிருப்பாயாக.

English:- "You Shall Not Commit Adultery.

யாத்திராகமம் 20-14 - Exodus 20-14விபசாரம் செய்யாதிருப்பாயாக.

15 - களவு செய்யாதிருப்பாயாக.

English:- "You Shall Not Steal.

யாத்திராகமம் 20-15 - Exodus 20-15களவு செய்யாதிருப்பாயாக.

16 - பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

English:- "You Shall Not Give False Testimony Against Your Neighbor.

யாத்திராகமம் 20-16 - Exodus 20-16பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

17 - பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

English:- "You Shall Not Covet Your Neighbor's House. You Shall Not Covet Your Neighbor's Wife, Or His Manservant Or Maidservant, His Ox Or Donkey, Or Anything That Belongs To Your Neighbor."

யாத்திராகமம் 20-17 - Exodus 20-17பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

18 - ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

English:- When The People Saw The Thunder And Lightning And Heard The Trumpet And Saw The Mountain In Smoke, They Trembled With Fear. They Stayed At A Distance

யாத்திராகமம் 20-18 - Exodus 20-18ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

19 - மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

English:- And Said To Moses, "Speak To Us Yourself And We Will Listen. But Do Not Have God Speak To Us Or We Will Die."

யாத்திராகமம் 20-19 - Exodus 20-19மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

20 - மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.

English:- Moses Said To The People, "Do Not Be Afraid. God Has Come To Test You, So That The Fear Of God Will Be With You To Keep You From Sinning."


21 - ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

English:- The People Remained At A Distance, While Moses Approached The Thick Darkness Where God Was.

யாத்திராகமம் 20-21 - Exodus 20-21ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

22 - அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.

English:- Then The Lord Said To Moses, "Tell The Israelites This: 'You Have Seen For Yourselves That I Have Spoken To You From Heaven:

யாத்திராகமம் 20-22 - Exodus 20-22அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.

23 - நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.

English:- Do Not Make Any Gods To Be Alongside Me; Do Not Make For Yourselves Gods Of Silver Or Gods Of Gold.

யாத்திராகமம் 20-23 - Exodus 20-23நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.

24 - மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

English:- " 'Make An Altar Of Earth For Me And Sacrifice On It Your Burnt Offerings And Fellowship Offerings, Your Sheep And Goats And Your Cattle. Wherever I Cause My Name To Be Honored, I Will Come To You And Bless You.

யாத்திராகமம் 20-24 - Exodus 20-24மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

25 - எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.

English:- If You Make An Altar Of Stones For Me, Do Not Build It With Dressed Stones, For You Will Defile It If You Use A Tool On It.

யாத்திராகமம் 20-25 - Exodus 20-25எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.

26 - என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.

English:- And Do Not Go Up To My Altar On Steps, Lest Your Nakedness Be Exposed On It.'

யாத்திராகமம் 20-26 - Exodus 20-26என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.


Previous Chapter Next Chapter