பரிசுத்த வேதாகமம் எபேசியர் அதிகாரம் 3 – Read Holy Bible Book Of Ephesians Chapter 3 In Tamil With English Reference
1 - இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
English:- For This Reason I, Paul, The Prisoner Of Christ Jesus For The Sake Of You Gentiles--
2 - உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமுமின்னதென்று கேட்டிருப்பீர்களே;
English:- Surely You Have Heard About The Administration Of God's Grace That Was Given To Me For You,
3 - அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
English:- That Is, The Mystery Made Known To Me By Revelation, As I Have Already Written Briefly.
4 - இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
English:- In Reading This, Then, You Will Be Able To Understand My Insight Into The Mystery Of Christ,
5 - அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;
English:- Which Was Not Made Known To Men In Other Generations As It Has Now Been Revealed By The Spirit To God's Holy Apostles And Prophets.
6 - இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
English:- This Mystery Is That Through The Gospel The Gentiles Are Heirs Together With Israel, Members Together Of One Body, And Sharers Together In The Promise In Christ Jesus.
7 - தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.
English:- I Became A Servant Of This Gospel By The Gift Of God's Grace Given Me Through The Working Of His Power.
8 - பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
English:- Although I Am Less Than The Least Of All God's People, This Grace Was Given Me: To Preach To The Gentiles The Unsearchable Riches Of Christ,
9 - தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,
English:- And To Make Plain To Everyone The Administration Of This Mystery, Which For Ages Past Was Kept Hidden In God, Who Created All Things.
10 - உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக,
English:- His Intent Was That Now, Through The Church, The Manifold Wisdom Of God Should Be Made Known To The Rulers And Authorities In The Heavenly Realms,
11 - இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
English:- According To His Eternal Purpose Which He Accomplished In Christ Jesus Our Lord.
12 - அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.
English:- In Him And Through Faith In Him We May Approach God With Freedom And Confidence.
13 - ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.
English:- I Ask You, Therefore, Not To Be Discouraged Because Of My Sufferings For You, Which Are Your Glory.
14 - இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,
English:- For This Reason I Kneel Before The Father,
15 - நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
English:- From Whom His Whole Family In Heaven And On Earth Derives Its Name.
16 - நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,
English:- I Pray That Out Of His Glorious Riches He May Strengthen You With Power Through His Spirit In Your Inner Being,
17 - விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி,
English:- So That Christ May Dwell In Your Hearts Through Faith. And I Pray That You, Being Rooted And Established In Love,
18 - சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
English:- May Have Power, Together With All The Saints, To Grasp How Wide And Long And High And Deep Is The Love Of Christ,
19 - அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
English:- And To Know This Love That Surpasses Knowledge--that You May Be Filled To The Measure Of All The Fullness Of God.
20 - நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
English:- Now To Him Who Is Able To Do Immeasurably More Than All We Ask Or Imagine, According To His Power That Is At Work Within Us,
21 - சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
English:- To Him Be Glory In The Church And In Christ Jesus Throughout All Generations, For Ever And Ever! Amen.