பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 54 – Read Holy Bible Book Of Isaiah Chapter 54 In Tamil With English Reference
1 - பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- "Sing, O Barren Woman, You Who Never Bore A Child; Burst Into Song, Shout For Joy, You Who Were Never In Labor; Because More Are The Children Of The Desolate Woman Than Of Her Who Has A Husband," Says The Lord .
2 - உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.
English:- "Enlarge The Place Of Your Tent, Stretch Your Tent Curtains Wide, Do Not Hold Back; Lengthen Your Cords, Strengthen Your Stakes.
3 - நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.
English:- For You Will Spread Out To The Right And To The Left; Your Descendants Will Dispossess Nations And Settle In Their Desolate Cities.
4 - பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
English:- "Do Not Be Afraid; You Will Not Suffer Shame. Do Not Fear Disgrace; You Will Not Be Humiliated. You Will Forget The Shame Of Your Youth And Remember No More The Reproach Of Your Widowhood.
5 - உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.
English:- For Your Maker Is Your Husband- The Lord Almighty Is His Name- The Holy One Of Israel Is Your Redeemer; He Is Called The God Of All The Earth.
6 - கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
English:- The Lord Will Call You Back As If You Were A Wife Deserted And Distressed In Spirit- A Wife Who Married Young, Only To Be Rejected," Says Your God.
7 - இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
English:- "For A Brief Moment I Abandoned You, But With Deep Compassion I Will Bring You Back.
8 - அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
English:- In A Surge Of Anger I Hid My Face From You For A Moment, But With Everlasting Kindness I Will Have Compassion On You," Says The Lord Your Redeemer.
9 - இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.
English:- "To Me This Is Like The Days Of Noah, When I Swore That The Waters Of Noah Would Never Again Cover The Earth. So Now I Have Sworn Not To Be Angry With You, Never To Rebuke You Again.
10 - மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
English:- Though The Mountains Be Shaken And The Hills Be Removed, Yet My Unfailing Love For You Will Not Be Shaken Nor My Covenant Of Peace Be Removed," Says The Lord , Who Has Compassion On You.
11 - சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
English:- "O Afflicted City, Lashed By Storms And Not Comforted, I Will Build You With Stones Of Turquoise, Your Foundations With Sapphires.
12 - உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
English:- I Will Make Your Battlements Of Rubies, Your Gates Of Sparkling Jewels, And All Your Walls Of Precious Stones.
13 - உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
English:- All Your Sons Will Be Taught By The Lord , And Great Will Be Your Children's Peace.
14 - நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
English:- In Righteousness You Will Be Established: Tyranny Will Be Far From You; You Will Have Nothing To Fear. Terror Will Be Far Removed; It Will Not Come Near You.
15 - இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
English:- If Anyone Does Attack You, It Will Not Be My Doing; Whoever Attacks You Will Surrender To You.
16 - இதோ, கரிநெருப்பை ஊதி, தன்கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.
English:- "See, It Is I Who Created The Blacksmith Who Fans The Coals Into Flame And Forges A Weapon Fit For Its Work. And It Is I Who Have Created The Destroyer To Work Havoc;
17 - உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- No Weapon Forged Against You Will Prevail, And You Will Refute Every Tongue That Accuses You. This Is The Heritage Of The Servants Of The Lord , And This Is Their Vindication From Me," Declares The Lord .