பரிசுத்த வேதாகமம் 2 பேதுரு அதிகாரம் 1 – Read Holy Bible Book Of 2 Peter Chapter 1 In Tamil With English Reference
1 - நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
English:- Simon Peter, A Servant And Apostle Of Jesus Christ, To Those Who Through The Righteousness Of Our God And Savior Jesus Christ Have Received A Faith As Precious As Ours:
2 - தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
English:- Grace And Peace Be Yours In Abundance Through The Knowledge Of God And Of Jesus Our Lord.
3 - தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
English:- His Divine Power Has Given Us Everything We Need For Life And Godliness Through Our Knowledge Of Him Who Called Us By His Own Glory And Goodness.
4 - இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
English:- Through These He Has Given Us His Very Great And Precious Promises, So That Through Them You May Participate In The Divine Nature And Escape The Corruption In The World Caused By Evil Desires.
5 - இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
English:- For This Very Reason, Make Every Effort To Add To Your Faith Goodness; And To Goodness, Knowledge;
6 - ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
English:- And To Knowledge, Self-control; And To Self-control, Perseverance; And To Perseverance, Godliness;
7 - தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
English:- And To Godliness, Brotherly Kindness; And To Brotherly Kindness, Love.
8 - இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
English:- For If You Possess These Qualities In Increasing Measure, They Will Keep You From Being Ineffective And Unproductive In Your Knowledge Of Our Lord Jesus Christ.
9 - இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
English:- But If Anyone Does Not Have Them, He Is Nearsighted And Blind, And Has Forgotten That He Has Been Cleansed From His Past Sins.
10 - ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
English:- Therefore, My Brothers, Be All The More Eager To Make Your Calling And Election Sure. For If You Do These Things, You Will Never Fall,
11 - இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
English:- And You Will Receive A Rich Welcome Into The Eternal Kingdom Of Our Lord And Savior Jesus Christ.
12 - இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.
English:- So I Will Always Remind You Of These Things, Even Though You Know Them And Are Firmly Established In The Truth You Now Have.
13 - நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,
English:- I Think It Is Right To Refresh Your Memory As Long As I Live In The Tent Of This Body,
14 - இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.
English:- Because I Know That I Will Soon Put It Aside, As Our Lord Jesus Christ Has Made Clear To Me.
15 - மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
English:- And I Will Make Every Effort To See That After My Departure You Will Always Be Able To Remember These Things.
16 - நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
English:- We Did Not Follow Cleverly Invented Stories When We Told You About The Power And Coming Of Our Lord Jesus Christ, But We Were Eyewitnesses Of His Majesty.
17 - இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
English:- For He Received Honor And Glory From God The Father When The Voice Came To Him From The Majestic Glory, Saying, "This Is My Son, Whom I Love; With Him I Am Well Pleased."
18 - அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.
English:- We Ourselves Heard This Voice That Came From Heaven When We Were With Him On The Sacred Mountain.
19 - அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
English:- And We Have The Word Of The Prophets Made More Certain, And You Will Do Well To Pay Attention To It, As To A Light Shining In A Dark Place, Until The Day Dawns And The Morning Star Rises In Your Hearts.
20 - வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
English:- Above All, You Must Understand That No Prophecy Of Scripture Came About By The Prophet's Own Interpretation.
21 - தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
English:- For Prophecy Never Had Its Origin In The Will Of Man, But Men Spoke From God As They Were Carried Along By The Holy Spirit.