2 நாளாகமம் 35 – 2 Chronicles 35


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 2 நாளாகமம் அதிகாரம் 35 – Read Holy Bible Book Of 2 Chronicles Chapter 35 In Tamil With English Reference


1 - அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.

English:- Josiah Celebrated The Passover To The Lord In Jerusalem, And The Passover Lamb Was Slaughtered On The Fourteenth Day Of The First Month.

2 நாளாகமம் 35-1 - 2 Chronicles 35-1அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.

2 - அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனைசெய்யத் திட்டப்படுத்தி,

English:- He Appointed The Priests To Their Duties And Encouraged Them In The Service Of The Lord 'S Temple.


3 - இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,

English:- He Said To The Levites, Who Instructed All Israel And Who Had Been Consecrated To The Lord : "Put The Sacred Ark In The Temple That Solomon Son Of David King Of Israel Built. It Is Not To Be Carried About On Your Shoulders. Now Serve The Lord Your God And His People Israel.

2 நாளாகமம் 35-3 - 2 Chronicles 35-3இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,

4 - இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,

English:- Prepare Yourselves By Families In Your Divisions, According To The Directions Written By David King Of Israel And By His Son Solomon.

2 நாளாகமம் 35-4 - 2 Chronicles 35-4இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,

5 - ஜனங்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த ஸ்தலத்திலே பிதாக்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று,

English:- "Stand In The Holy Place With A Group Of Levites For Each Subdivision Of The Families Of Your Fellow Countrymen, The Lay People.

2 நாளாகமம் 35-5 - 2 Chronicles 35-5ஜனங்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த ஸ்தலத்திலே பிதாக்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று,

6 - பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்பண்ணி, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.

English:- Slaughter The Passover Lambs, Consecrate Yourselves And Prepare The Lambs For Your Fellow Countrymen, Doing What The Lord Commanded Through Moses."

2 நாளாகமம் 35-6 - 2 Chronicles 35-6பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்பண்ணி, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.

7 - வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.

English:- Josiah Provided For All The Lay People Who Were There A Total Of Thirty Thousand Sheep And Goats For The Passover Offerings, And Also Three Thousand Cattle-all From The King's Own Possessions.

2 நாளாகமம் 35-7 - 2 Chronicles 35-7வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.

8 - அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

English:- His Officials Also Contributed Voluntarily To The People And The Priests And Levites. Hilkiah, Zechariah And Jehiel, The Administrators Of God's Temple, Gave The Priests Twenty-six Hundred Passover Offerings And Three Hundred Cattle.

2 நாளாகமம் 35-8 - 2 Chronicles 35-8அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

9 - கொனானியா, செமாயேல், நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

English:- Also Conaniah Along With Shemaiah And Nethanel, His Brothers, And Hashabiah, Jeiel And Jozabad, The Leaders Of The Levites, Provided Five Thousand Passover Offerings And Five Hundred Head Of Cattle For The Levites.

2 நாளாகமம் 35-9 - 2 Chronicles 35-9கொனானியா, செமாயேல், நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

10 - இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,

English:- The Service Was Arranged And The Priests Stood In Their Places With The Levites In Their Divisions As The King Had Ordered.


11 - பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள்.

English:- The Passover Lambs Were Slaughtered, And The Priests Sprinkled The Blood Handed To Them, While The Levites Skinned The Animals.

2 நாளாகமம் 35-11 - 2 Chronicles 35-11பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள்.

12 - மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.

English:- They Set Aside The Burnt Offerings To Give Them To The Subdivisions Of The Families Of The People To Offer To The Lord , As Is Written In The Book Of Moses. They Did The Same With The Cattle.

2 நாளாகமம் 35-12 - 2 Chronicles 35-12மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.

13 - அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்.

English:- They Roasted The Passover Animals Over The Fire As Prescribed, And Boiled The Holy Offerings In Pots, Caldrons And Pans And Served Them Quickly To All The People.

2 நாளாகமம் 35-13 - 2 Chronicles 35-13அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்.

14 - பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும்செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.

English:- After This, They Made Preparations For Themselves And For The Priests, Because The Priests, The Descendants Of Aaron, Were Sacrificing The Burnt Offerings And The Fat Portions Until Nightfall. So The Levites Made Preparations For Themselves And For The Aaronic Priests.

2 நாளாகமம் 35-14 - 2 Chronicles 35-14பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும்செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.

15 - தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக் கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.

English:- The Musicians, The Descendants Of Asaph, Were In The Places Prescribed By David, Asaph, Heman And Jeduthun The King's Seer. The Gatekeepers At Each Gate Did Not Need To Leave Their Posts, Because Their Fellow Levites Made The Preparations For Them.

2 நாளாகமம் 35-15 - 2 Chronicles 35-15தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக் கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.

16 - அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.

English:- So At That Time The Entire Service Of The Lord Was Carried Out For The Celebration Of The Passover And The Offering Of Burnt Offerings On The Altar Of The Lord , As King Josiah Had Ordered.

2 நாளாகமம் 35-16 - 2 Chronicles 35-16அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.

17 - அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழுநாளளவும் ஆசரித்தார்கள்.

English:- The Israelites Who Were Present Celebrated The Passover At That Time And Observed The Feast Of Unleavened Bread For Seven Days.

2 நாளாகமம் 35-17 - 2 Chronicles 35-17அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழுநாளளவும் ஆசரித்தார்கள்.

18 - தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.

English:- The Passover Had Not Been Observed Like This In Israel Since The Days Of The Prophet Samuel; And None Of The Kings Of Israel Had Ever Celebrated Such A Passover As Did Josiah, With The Priests, The Levites And All Judah And Israel Who Were There With The People Of Jerusalem.

2 நாளாகமம் 35-18 - 2 Chronicles 35-18தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.

19 - யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.

English:- This Passover Was Celebrated In The Eighteenth Year Of Josiah's Reign.

2 நாளாகமம் 35-19 - 2 Chronicles 35-19யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.

20 - யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின்ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்.

English:- After All This, When Josiah Had Set The Temple In Order, Neco King Of Egypt Went Up To Fight At Carchemish On The Euphrates, And Josiah Marched Out To Meet Him In Battle.


21 - அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.

English:- But Neco Sent Messengers To Him, Saying, "What Quarrel Is There Between You And Me, O King Of Judah? It Is Not You I Am Attacking At This Time, But The House With Which I Am At War. God Has Told Me To Hurry; So Stop Opposing God, Who Is With Me, Or He Will Destroy You."

2 நாளாகமம் 35-21 - 2 Chronicles 35-21அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.

22 - ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன அவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும் அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான்.

English:- Josiah, However, Would Not Turn Away From Him, But Disguised Himself To Engage Him In Battle. He Would Not Listen To What Neco Had Said At God's Command But Went To Fight Him On The Plain Of Megiddo.

2 நாளாகமம் 35-22 - 2 Chronicles 35-22ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன அவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும் அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான்.

23 - வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.

English:- Archers Shot King Josiah, And He Told His Officers, "Take Me Away; I Am Badly Wounded."

2 நாளாகமம் 35-23 - 2 Chronicles 35-23வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.

24 - அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின் மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

English:- So They Took Him Out Of His Chariot, Put Him In The Other Chariot He Had And Brought Him To Jerusalem, Where He Died. He Was Buried In The Tombs Of His Fathers, And All Judah And Jerusalem Mourned For Him.

2 நாளாகமம் 35-24 - 2 Chronicles 35-24அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின் மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

25 - எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

English:- Jeremiah Composed Laments For Josiah, And To This Day All The Men And Women Singers Commemorate Josiah In The Laments. These Became A Tradition In Israel And Are Written In The Laments.

2 நாளாகமம் 35-25 - 2 Chronicles 35-25எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

26 - யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,

English:- The Other Events Of Josiah's Reign And His Acts Of Devotion, According To What Is Written In The Law Of The Lord -

2 நாளாகமம் 35-26 - 2 Chronicles 35-26யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,

27 - அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

English:- All The Events, From Beginning To End, Are Written In The Book Of The Kings Of Israel And Judah.

2 நாளாகமம் 35-27 - 2 Chronicles 35-27அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


Previous Chapter Next Chapter