2 நாளாகமம் 24 – 2 Chronicles 24


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 2 நாளாகமம் அதிகாரம் 24 – Read Holy Bible Book Of 2 Chronicles Chapter 24 In Tamil With English Reference


1 - யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

English:- Joash Was Seven Years Old When He Became King, And He Reigned In Jerusalem Forty Years. His Mother's Name Was Zibiah; She Was From Beersheba.

2 நாளாகமம் 24-1 - 2 Chronicles 24-1யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

2 - ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

English:- Joash Did What Was Right In The Eyes Of The Lord All The Years Of Jehoiada The Priest.


3 - அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

English:- Jehoiada Chose Two Wives For Him, And He Had Sons And Daughters.

2 நாளாகமம் 24-3 - 2 Chronicles 24-3அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

4 - அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.

English:- Some Time Later Joash Decided To Restore The Temple Of The Lord .

2 நாளாகமம் 24-4 - 2 Chronicles 24-4அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.

5 - அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

English:- He Called Together The Priests And Levites And Said To Them, "Go To The Towns Of Judah And Collect The Money Due Annually From All Israel, To Repair The Temple Of Your God. Do It Now." But The Levites Did Not Act At Once.

2 நாளாகமம் 24-5 - 2 Chronicles 24-5அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

6 - அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?

English:- Therefore The King Summoned Jehoiada The Chief Priest And Said To Him, "Why Haven't You Required The Levites To Bring In From Judah And Jerusalem The Tax Imposed By Moses The Servant Of The Lord And By The Assembly Of Israel For The Tent Of The Testimony?"

2 நாளாகமம் 24-6 - 2 Chronicles 24-6அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?

7 - அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.

English:- Now The Sons Of That Wicked Woman Athaliah Had Broken Into The Temple Of God And Had Used Even Its Sacred Objects For The Baals.

2 நாளாகமம் 24-7 - 2 Chronicles 24-7அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.

8 - அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,

English:- At The King's Command, A Chest Was Made And Placed Outside, At The Gate Of The Temple Of The Lord .

2 நாளாகமம் 24-8 - 2 Chronicles 24-8அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,

9 - கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.

English:- A Proclamation Was Then Issued In Judah And Jerusalem That They Should Bring To The Lord The Tax That Moses The Servant Of God Had Required Of Israel In The Desert.

2 நாளாகமம் 24-9 - 2 Chronicles 24-9கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.

10 - அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.

English:- All The Officials And All The People Brought Their Contributions Gladly, Dropping Them Into The Chest Until It Was Full.


11 - வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

English:- Whenever The Chest Was Brought In By The Levites To The King's Officials And They Saw That There Was A Large Amount Of Money, The Royal Secretary And The Officer Of The Chief Priest Would Come And Empty The Chest And Carry It Back To Its Place. They Did This Regularly And Collected A Great Amount Of Money.

2 நாளாகமம் 24-11 - 2 Chronicles 24-11வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

12 - அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.

English:- The King And Jehoiada Gave It To The Men Who Carried Out The Work Required For The Temple Of The Lord . They Hired Masons And Carpenters To Restore The Lord 'S Temple, And Also Workers In Iron And Bronze To Repair The Temple.

2 நாளாகமம் 24-12 - 2 Chronicles 24-12அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.

13 - அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.

English:- The Men In Charge Of The Work Were Diligent, And The Repairs Progressed Under Them. They Rebuilt The Temple Of God According To Its Original Design And Reinforced It.

2 நாளாகமம் 24-13 - 2 Chronicles 24-13அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.

14 - அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.

English:- When They Had Finished, They Brought The Rest Of The Money To The King And Jehoiada, And With It Were Made Articles For The Lord 'S Temple: Articles For The Service And For The Burnt Offerings, And Also Dishes And Other Objects Of Gold And Silver. As Long As Jehoiada Lived, Burnt Offerings Were Presented Continually In The Temple Of The Lord .

2 நாளாகமம் 24-14 - 2 Chronicles 24-14அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.

15 - யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.

English:- Now Jehoiada Was Old And Full Of Years, And He Died At The Age Of A Hundred And Thirty.

2 நாளாகமம் 24-15 - 2 Chronicles 24-15யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.

16 - அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

English:- He Was Buried With The Kings In The City Of David, Because Of The Good He Had Done In Israel For God And His Temple.

2 நாளாகமம் 24-16 - 2 Chronicles 24-16அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

17 - யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.

English:- After The Death Of Jehoiada, The Officials Of Judah Came And Paid Homage To The King, And He Listened To Them.

2 நாளாகமம் 24-17 - 2 Chronicles 24-17யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.

18 - அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

English:- They Abandoned The Temple Of The Lord , The God Of Their Fathers, And Worshiped Asherah Poles And Idols. Because Of Their Guilt, God's Anger Came Upon Judah And Jerusalem.

2 நாளாகமம் 24-18 - 2 Chronicles 24-18அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

19 - அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.

English:- Although The Lord Sent Prophets To The People To Bring Them Back To Him, And Though They Testified Against Them, They Would Not Listen.

2 நாளாகமம் 24-19 - 2 Chronicles 24-19அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.

20 - அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.

English:- Then The Spirit Of God Came Upon Zechariah Son Of Jehoiada The Priest. He Stood Before The People And Said, "This Is What God Says: 'Why Do You Disobey The Lord 'S Commands? You Will Not Prosper. Because You Have Forsaken The Lord , He Has Forsaken You.' "


21 - அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

English:- But They Plotted Against Him, And By Order Of The King They Stoned Him To Death In The Courtyard Of The Lord 'S Temple.

2 நாளாகமம் 24-21 - 2 Chronicles 24-21அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

22 - அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

English:- King Joash Did Not Remember The Kindness Zechariah's Father Jehoiada Had Shown Him But Killed His Son, Who Said As He Lay Dying, "May The Lord See This And Call You To Account."

2 நாளாகமம் 24-22 - 2 Chronicles 24-22அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

23 - மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.

English:- At The Turn Of The Year, The Army Of Aram Marched Against Joash; It Invaded Judah And Jerusalem And Killed All The Leaders Of The People. They Sent All The Plunder To Their King In Damascus.

2 நாளாகமம் 24-23 - 2 Chronicles 24-23மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.

24 - சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.

English:- Although The Aramean Army Had Come With Only A Few Men, The Lord Delivered Into Their Hands A Much Larger Army. Because Judah Had Forsaken The Lord , The God Of Their Fathers, Judgment Was Executed On Joash.

2 நாளாகமம் 24-24 - 2 Chronicles 24-24சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.

25 - அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

English:- When The Arameans Withdrew, They Left Joash Severely Wounded. His Officials Conspired Against Him For Murdering The Son Of Jehoiada The Priest, And They Killed Him In His Bed. So He Died And Was Buried In The City Of David, But Not In The Tombs Of The Kings.

2 நாளாகமம் 24-25 - 2 Chronicles 24-25அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

26 - அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.

English:- Those Who Conspired Against Him Were Zabad, Son Of Shimeath An Ammonite Woman, And Jehozabad, Son Of Shimrith A Moabite Woman.

2 நாளாகமம் 24-26 - 2 Chronicles 24-26அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.

27 - அவன் குமாரரைப்பற்றியும். அவன்மேல் வந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

English:- The Account Of His Sons, The Many Prophecies About Him, And The Record Of The Restoration Of The Temple Of God Are Written In The Annotations On The Book Of The Kings. And Amaziah His Son Succeeded Him As King.

2 நாளாகமம் 24-27 - 2 Chronicles 24-27அவன் குமாரரைப்பற்றியும். அவன்மேல் வந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


Previous Chapter Next Chapter