1 நாளாகமம் 7 – 1 Chronicles 7


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 1 நாளாகமம் அதிகாரம் 7 – Read Holy Bible Book Of 1 Chronicles Chapter 7 In Tamil With English Reference


1 - இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.

English:- The Sons Of Issachar: Tola, Puah, Jashub And Shimron-four In All.

1 நாளாகமம் 7-1 - 1 Chronicles 7-1இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.

2 - தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது.

English:- The Sons Of Tola: Uzzi, Rephaiah, Jeriel, Jahmai, Ibsam And Samuel-heads Of Their Families. During The Reign Of David, The Descendants Of Tola Listed As Fighting Men In Their Genealogy Numbered ,.


3 - ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.

English:- The Son Of Uzzi: Izrahiah. The Sons Of Izrahiah: Michael, Obadiah, Joel And Isshiah. All Five Of Them Were Chiefs.

1 நாளாகமம் 7-3 - 1 Chronicles 7-3ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.

4 - அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரானவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.

English:- According To Their Family Genealogy, They Had , Men Ready For Battle, For They Had Many Wives And Children.

1 நாளாகமம் 7-4 - 1 Chronicles 7-4அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரானவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.

5 - இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.

English:- The Relatives Who Were Fighting Men Belonging To All The Clans Of Issachar, As Listed In Their Genealogy, Were , In All.

1 நாளாகமம் 7-5 - 1 Chronicles 7-5இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.

6 - பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.

English:- Three Sons Of Benjamin: Bela, Beker And Jediael.

1 நாளாகமம் 7-6 - 1 Chronicles 7-6பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.

7 - பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.

English:- The Sons Of Bela: Ezbon, Uzzi, Uzziel, Jerimoth And Iri, Heads Of Families-five In All. Their Genealogical Record Listed , Fighting Men.

1 நாளாகமம் 7-7 - 1 Chronicles 7-7பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.

8 - பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.

English:- The Sons Of Beker: Zemirah, Joash, Eliezer, Elioenai, Omri, Jeremoth, Abijah, Anathoth And Alemeth. All These Were The Sons Of Beker.

1 நாளாகமம் 7-8 - 1 Chronicles 7-8பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.

9 - தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.

English:- Their Genealogical Record Listed The Heads Of Families And , Fighting Men.

1 நாளாகமம் 7-9 - 1 Chronicles 7-9தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.

10 - யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.

English:- The Son Of Jediael: Bilhan. The Sons Of Bilhan: Jeush, Benjamin, Ehud, Kenaanah, Zethan, Tarshish And Ahishahar.


11 - யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.

English:- All These Sons Of Jediael Were Heads Of Families. There Were , Fighting Men Ready To Go Out To War.

1 நாளாகமம் 7-11 - 1 Chronicles 7-11யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.

12 - சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.

English:- The Shuppites And Huppites Were The Descendants Of Ir, And The Hushites The Descendants Of Aher.

1 நாளாகமம் 7-12 - 1 Chronicles 7-12சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.

13 - நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.

English:- The Sons Of Naphtali: Jahziel, Guni, Jezer And Shillem -The Descendants Of Bilhah.

1 நாளாகமம் 7-13 - 1 Chronicles 7-13நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.

14 - மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.

English:- The Descendants Of Manasseh: Asriel Was His Descendant Through His Aramean Concubine. She Gave Birth To Makir The Father Of Gilead.

1 நாளாகமம் 7-14 - 1 Chronicles 7-14மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.

15 - மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.

English:- Makir Took A Wife From Among The Huppites And Shuppites. His Sister's Name Was Maacah. Another Descendant Was Named Zelophehad, Who Had Only Daughters.

1 நாளாகமம் 7-15 - 1 Chronicles 7-15மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.

16 - மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.

English:- Makir's Wife Maacah Gave Birth To A Son And Named Him Peresh. His Brother Was Named Sheresh, And His Sons Were Ulam And Rakem.

1 நாளாகமம் 7-16 - 1 Chronicles 7-16மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.

17 - ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.

English:- The Son Of Ulam: Bedan. These Were The Sons Of Gilead Son Of Makir, The Son Of Manasseh.

1 நாளாகமம் 7-17 - 1 Chronicles 7-17ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.

18 - இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.

English:- His Sister Hammoleketh Gave Birth To Ishhod, Abiezer And Mahlah.

1 நாளாகமம் 7-18 - 1 Chronicles 7-18இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.

19 - செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.

English:- The Sons Of Shemida Were: Ahian, Shechem, Likhi And Aniam.

1 நாளாகமம் 7-19 - 1 Chronicles 7-19செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.

20 - எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.

English:- The Descendants Of Ephraim: Shuthelah, Bered His Son, Tahath His Son, Eleadah His Son, Tahath His Son,


21 - இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

English:- Zabad His Son And Shuthelah His Son. Ezer And Elead Were Killed By The Native-born Men Of Gath, When They Went Down To Seize Their Livestock.

1 நாளாகமம் 7-21 - 1 Chronicles 7-21இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

22 - அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.

English:- Their Father Ephraim Mourned For Them Many Days, And His Relatives Came To Comfort Him.

1 நாளாகமம் 7-22 - 1 Chronicles 7-22அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.

23 - பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.

English:- Then He Lay With His Wife Again, And She Became Pregnant And Gave Birth To A Son. He Named Him Beriah, Because There Had Been Misfortune In His Family.

1 நாளாகமம் 7-23 - 1 Chronicles 7-23பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.

24 - இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.

English:- His Daughter Was Sheerah, Who Built Lower And Upper Beth Horon As Well As Uzzen Sheerah.

1 நாளாகமம் 7-24 - 1 Chronicles 7-24இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.

25 - அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.

English:- Rephah Was His Son, Resheph His Son, Telah His Son, Tahan His Son,

1 நாளாகமம் 7-25 - 1 Chronicles 7-25அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.

26 - இவனுடைய குமாரன் லாதான், இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.

English:- Ladan His Son, Ammihud His Son, Elishama His Son,

1 நாளாகமம் 7-26 - 1 Chronicles 7-26இவனுடைய குமாரன் லாதான், இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.

27 - இவனுடைய குமாரன் நூன்: இவனுடைய குமாரன் யோசுவா.

English:- Nun His Son And Joshua His Son.

1 நாளாகமம் 7-27 - 1 Chronicles 7-27இவனுடைய குமாரன் நூன்: இவனுடைய குமாரன் யோசுவா.

28 - அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,

English:- Their Lands And Settlements Included Bethel And Its Surrounding Villages, Naaran To The East, Gezer And Its Villages To The West, And Shechem And Its Villages All The Way To Ayyah And Its Villages.

1 நாளாகமம் 7-28 - 1 Chronicles 7-28அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,

29 - மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.

English:- Along The Borders Of Manasseh Were Beth Shan, Taanach, Megiddo And Dor, Together With Their Villages. The Descendants Of Joseph Son Of Israel Lived In These Towns.

1 நாளாகமம் 7-29 - 1 Chronicles 7-29மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.

30 - ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.

English:- The Sons Of Asher: Imnah, Ishvah, Ishvi And Beriah. Their Sister Was Serah.

1 நாளாகமம் 7-30 - 1 Chronicles 7-30ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.

31 - பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.

English:- The Sons Of Beriah: Heber And Malkiel, Who Was The Father Of Birzaith.

1 நாளாகமம் 7-31 - 1 Chronicles 7-31பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.

32 - ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.

English:- Heber Was The Father Of Japhlet, Shomer And Hotham And Of Their Sister Shua.

1 நாளாகமம் 7-32 - 1 Chronicles 7-32ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.

33 - யப்லேத்தின் குமாரர் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.

English:- The Sons Of Japhlet: Pasach, Bimhal And Ashvath. These Were Japhlet's Sons.

1 நாளாகமம் 7-33 - 1 Chronicles 7-33யப்லேத்தின் குமாரர் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.

34 - சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.

English:- The Sons Of Shomer: Ahi, Rohgah, Hubbah And Aram.

1 நாளாகமம் 7-34 - 1 Chronicles 7-34சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.

35 - அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.

English:- The Sons Of His Brother Helem: Zophah, Imna, Shelesh And Amal.

1 நாளாகமம் 7-35 - 1 Chronicles 7-35அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.

36 - சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,

English:- The Sons Of Zophah: Suah, Harnepher, Shual, Beri, Imrah,

1 நாளாகமம் 7-36 - 1 Chronicles 7-36சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,

37 - பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.

English:- Bezer, Hod, Shamma, Shilshah, Ithran And Beera.

1 நாளாகமம் 7-37 - 1 Chronicles 7-37பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.

38 - யெத்தேரின் குமாரர், எப்புன்னே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.

English:- The Sons Of Jether: Jephunneh, Pispah And Ara.

1 நாளாகமம் 7-38 - 1 Chronicles 7-38யெத்தேரின் குமாரர், எப்புன்னே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.

39 - உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.

English:- The Sons Of Ulla: Arah, Hanniel And Rizia.

1 நாளாகமம் 7-39 - 1 Chronicles 7-39உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.

40 - ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.

English:- All These Were Descendants Of Asher-heads Of Families, Choice Men, Brave Warriors And Outstanding Leaders. The Number Of Men Ready For Battle, As Listed In Their Genealogy, Was ,.

1 நாளாகமம் 7-40 - 1 Chronicles 7-40ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.


Previous Chapter Next Chapter