சகரியா 4 – Zechariah 4


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சகரியா அதிகாரம் 4 – Read Holy Bible Book Of Zechariah Chapter 4 In Tamil With English Reference


1 - என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:

English:- Then The Angel Who Talked With Me Returned And Wakened Me, As A Man Is Wakened From His Sleep.

சகரியா 4-1 - Zechariah 4-1என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி:

2 - நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.

English:- He Asked Me, "What Do You See?" I Answered, "I See A Solid Gold Lampstand With A Bowl At The Top And Seven Lights On It, With Seven Channels To The Lights.


3 - அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

English:- Also There Are Two Olive Trees By It, One On The Right Of The Bowl And The Other On Its Left."

சகரியா 4-3 - Zechariah 4-3அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.

4 - நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

English:- I Asked The Angel Who Talked With Me, "What Are These, My Lord?"

சகரியா 4-4 - Zechariah 4-4நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

5 - என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

English:- He Answered, "Do You Not Know What These Are?" "No, My Lord," I Replied.

சகரியா 4-5 - Zechariah 4-5என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

6 - அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

English:- So He Said To Me, "This Is The Word Of The Lord To Zerubbabel: 'Not By Might Nor By Power, But By My Spirit,' Says The Lord Almighty.

சகரியா 4-6 - Zechariah 4-6அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

7 - பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

English:- "What Are You, O Mighty Mountain? Before Zerubbabel You Will Become Level Ground. Then He Will Bring Out The Capstone To Shouts Of 'God Bless It! God Bless It!' "

சகரியா 4-7 - Zechariah 4-7பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

8 - பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

English:- Then The Word Of The Lord Came To Me:

சகரியா 4-8 - Zechariah 4-8பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

9 - செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.

English:- "The Hands Of Zerubbabel Have Laid The Foundation Of This Temple; His Hands Will Also Complete It. Then You Will Know That The Lord Almighty Has Sent Me To You.

சகரியா 4-9 - Zechariah 4-9செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்.

10 - அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.

English:- "Who Despises The Day Of Small Things? Men Will Rejoice When They See The Plumb Line In The Hand Of Zerubbabel. "(These Seven Are The Eyes Of The Lord , Which Range Throughout The Earth.)"


11 - பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.

English:- Then I Asked The Angel, "What Are These Two Olive Trees On The Right And The Left Of The Lampstand?"

சகரியா 4-11 - Zechariah 4-11பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.

12 - மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

English:- Again I Asked Him, "What Are These Two Olive Branches Beside The Two Gold Pipes That Pour Out Golden Oil?"

சகரியா 4-12 - Zechariah 4-12மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

13 - அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

English:- He Replied, "Do You Not Know What These Are?" "No, My Lord," I Said.

சகரியா 4-13 - Zechariah 4-13அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

14 - அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

English:- So He Said, "These Are The Two Who Are Anointed To Serve The Lord Of All The Earth."

சகரியா 4-14 - Zechariah 4-14அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.


Previous Chapter Next Chapter