நீதிமொழிகள் 5 – Proverbs 5


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 5 – Read Holy Bible Book Of Proverbs Chapter 5 In Tamil With English Reference


1 - என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

English:- My Son, Pay Attention To My Wisdom, Listen Well To My Words Of Insight,

நீதிமொழிகள் 5-1 - Proverbs 5-1என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

2 - அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

English:- That You May Maintain Discretion And Your Lips May Preserve Knowledge.


3 - பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

English:- For The Lips Of An Adulteress Drip Honey, And Her Speech Is Smoother Than Oil;

நீதிமொழிகள் 5-3 - Proverbs 5-3பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

4 - அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.

English:- But In The End She Is Bitter As Gall, Sharp As A Double-edged Sword.

நீதிமொழிகள் 5-4 - Proverbs 5-4அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.

5 - அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

English:- Her Feet Go Down To Death; Her Steps Lead Straight To The Grave.

நீதிமொழிகள் 5-5 - Proverbs 5-5அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

6 - நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

English:- She Gives No Thought To The Way Of Life; Her Paths Are Crooked, But She Knows It Not.

நீதிமொழிகள் 5-6 - Proverbs 5-6நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

7 - ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.

English:- Now Then, My Sons, Listen To Me; Do Not Turn Aside From What I Say.

நீதிமொழிகள் 5-7 - Proverbs 5-7ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.

8 - உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.

English:- Keep To A Path Far From Her, Do Not Go Near The Door Of Her House,

நீதிமொழிகள் 5-8 - Proverbs 5-8உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.

9 - சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.

English:- Lest You Give Your Best Strength To Others And Your Years To One Who Is Cruel,

நீதிமொழிகள் 5-9 - Proverbs 5-9சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.

10 - அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.

English:- Lest Strangers Feast On Your Wealth And Your Toil Enrich Another Man's House.


11 - முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

English:- At The End Of Your Life You Will Groan, When Your Flesh And Body Are Spent.

நீதிமொழிகள் 5-11 - Proverbs 5-11முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

12 - ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

English:- You Will Say, "How I Hated Discipline! How My Heart Spurned Correction!

நீதிமொழிகள் 5-12 - Proverbs 5-12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

13 - என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!

English:- I Would Not Obey My Teachers Or Listen To My Instructors.

நீதிமொழிகள் 5-13 - Proverbs 5-13என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!

14 - சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.

English:- I Have Come To The Brink Of Utter Ruin In The Midst Of The Whole Assembly."

நீதிமொழிகள் 5-14 - Proverbs 5-14சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.

15 - உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

English:- Drink Water From Your Own Cistern, Running Water From Your Own Well.

நீதிமொழிகள் 5-15 - Proverbs 5-15உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

16 - உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

English:- Should Your Springs Overflow In The Streets, Your Streams Of Water In The Public Squares?

நீதிமொழிகள் 5-16 - Proverbs 5-16உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

17 - அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.

English:- Let Them Be Yours Alone, Never To Be Shared With Strangers.

நீதிமொழிகள் 5-17 - Proverbs 5-17அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.

18 - உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

English:- May Your Fountain Be Blessed, And May You Rejoice In The Wife Of Your Youth.

நீதிமொழிகள் 5-18 - Proverbs 5-18உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

19 - அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

English:- A Loving Doe, A Graceful Deer- May Her Breasts Satisfy You Always, May You Ever Be Captivated By Her Love.

நீதிமொழிகள் 5-19 - Proverbs 5-19அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

20 - என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

English:- Why Be Captivated, My Son, By An Adulteress? Why Embrace The Bosom Of Another Man's Wife?


21 - மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

English:- For A Man's Ways Are In Full View Of The Lord , And He Examines All His Paths.

நீதிமொழிகள் 5-21 - Proverbs 5-21மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

22 - துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

English:- The Evil Deeds Of A Wicked Man Ensnare Him; The Cords Of His Sin Hold Him Fast.

நீதிமொழிகள் 5-22 - Proverbs 5-22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

23 - அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

English:- He Will Die For Lack Of Discipline, Led Astray By His Own Great Folly.

நீதிமொழிகள் 5-23 - Proverbs 5-23அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.


Previous Chapter Next Chapter