நீதிமொழிகள் 15 – Proverbs 15


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 15 – Read Holy Bible Book Of Proverbs Chapter 15 In Tamil With English Reference


1 - மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

English:- A Gentle Answer Turns Away Wrath, But A Harsh Word Stirs Up Anger.

நீதிமொழிகள் 15-1 - Proverbs 15-1மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

2 - ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

English:- The Tongue Of The Wise Commends Knowledge, But The Mouth Of The Fool Gushes Folly.


3 - கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

English:- The Eyes Of The Lord Are Everywhere, Keeping Watch On The Wicked And The Good.

நீதிமொழிகள் 15-3 - Proverbs 15-3கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

4 - ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

English:- The Tongue That Brings Healing Is A Tree Of Life, But A Deceitful Tongue Crushes The Spirit.

நீதிமொழிகள் 15-4 - Proverbs 15-4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

5 - மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

English:- A Fool Spurns His Father's Discipline, But Whoever Heeds Correction Shows Prudence.

நீதிமொழிகள் 15-5 - Proverbs 15-5மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

6 - நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.

English:- The House Of The Righteous Contains Great Treasure, But The Income Of The Wicked Brings Them Trouble.

நீதிமொழிகள் 15-6 - Proverbs 15-6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.

7 - ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.

English:- The Lips Of The Wise Spread Knowledge; Not So The Hearts Of Fools.

நீதிமொழிகள் 15-7 - Proverbs 15-7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.

8 - துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

English:- The Lord Detests The Sacrifice Of The Wicked, But The Prayer Of The Upright Pleases Him.

நீதிமொழிகள் 15-8 - Proverbs 15-8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

9 - துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

English:- The Lord Detests The Way Of The Wicked But He Loves Those Who Pursue Righteousness.

நீதிமொழிகள் 15-9 - Proverbs 15-9துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

10 - வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

English:- Stern Discipline Awaits Him Who Leaves The Path; He Who Hates Correction Will Die.


11 - பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

English:- Death And Destruction Lie Open Before The Lord - How Much More The Hearts Of Men!

நீதிமொழிகள் 15-11 - Proverbs 15-11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

12 - பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

English:- A Mocker Resents Correction; He Will Not Consult The Wise.

நீதிமொழிகள் 15-12 - Proverbs 15-12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

13 - மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.

English:- A Happy Heart Makes The Face Cheerful, But Heartache Crushes The Spirit.

நீதிமொழிகள் 15-13 - Proverbs 15-13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.

14 - புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.

English:- The Discerning Heart Seeks Knowledge, But The Mouth Of A Fool Feeds On Folly.

நீதிமொழிகள் 15-14 - Proverbs 15-14புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.

15 - சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.

English:- All The Days Of The Oppressed Are Wretched, But The Cheerful Heart Has A Continual Feast.

நீதிமொழிகள் 15-15 - Proverbs 15-15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.

16 - சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

English:- Better A Little With The Fear Of The Lord Than Great Wealth With Turmoil.

நீதிமொழிகள் 15-16 - Proverbs 15-16சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

17 - பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.

English:- Better A Meal Of Vegetables Where There Is Love Than A Fattened Calf With Hatred.

நீதிமொழிகள் 15-17 - Proverbs 15-17பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.

18 - கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

English:- A Hot-tempered Man Stirs Up Dissension, But A Patient Man Calms A Quarrel.

நீதிமொழிகள் 15-18 - Proverbs 15-18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

19 - சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

English:- The Way Of The Sluggard Is Blocked With Thorns, But The Path Of The Upright Is A Highway.

நீதிமொழிகள் 15-19 - Proverbs 15-19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

20 - ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

English:- A Wise Son Brings Joy To His Father, But A Foolish Man Despises His Mother.


21 - மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.

English:- Folly Delights A Man Who Lacks Judgment, But A Man Of Understanding Keeps A Straight Course.

நீதிமொழிகள் 15-21 - Proverbs 15-21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.

22 - ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

English:- Plans Fail For Lack Of Counsel, But With Many Advisers They Succeed.

நீதிமொழிகள் 15-22 - Proverbs 15-22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

23 - மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

English:- A Man Finds Joy In Giving An Apt Reply- And How Good Is A Timely Word!

நீதிமொழிகள் 15-23 - Proverbs 15-23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

24 - கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.

English:- The Path Of Life Leads Upward For The Wise To Keep Him From Going Down To The Grave.

நீதிமொழிகள் 15-24 - Proverbs 15-24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.

25 - அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

English:- The Lord Tears Down The Proud Man's House But He Keeps The Widow's Boundaries Intact.

நீதிமொழிகள் 15-25 - Proverbs 15-25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

26 - துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

English:- The Lord Detests The Thoughts Of The Wicked, But Those Of The Pure Are Pleasing To Him.

நீதிமொழிகள் 15-26 - Proverbs 15-26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

27 - பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

English:- A Greedy Man Brings Trouble To His Family, But He Who Hates Bribes Will Live.

நீதிமொழிகள் 15-27 - Proverbs 15-27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

28 - நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

English:- The Heart Of The Righteous Weighs Its Answers, But The Mouth Of The Wicked Gushes Evil.

நீதிமொழிகள் 15-28 - Proverbs 15-28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

29 - துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

English:- The Lord Is Far From The Wicked But He Hears The Prayer Of The Righteous.

நீதிமொழிகள் 15-29 - Proverbs 15-29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

30 - கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.

English:- A Cheerful Look Brings Joy To The Heart, And Good News Gives Health To The Bones.

நீதிமொழிகள் 15-30 - Proverbs 15-30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.

31 - ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.

English:- He Who Listens To A Life-giving Rebuke Will Be At Home Among The Wise.

நீதிமொழிகள் 15-31 - Proverbs 15-31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.

32 - புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

English:- He Who Ignores Discipline Despises Himself, But Whoever Heeds Correction Gains Understanding.

நீதிமொழிகள் 15-32 - Proverbs 15-32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

33 - கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

English:- The Fear Of The Lord Teaches A Man Wisdom, And Humility Comes Before Honor.

நீதிமொழிகள் 15-33 - Proverbs 15-33கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.


Previous Chapter Next Chapter