மாற்கு 16 – Mark 16


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் மாற்கு அதிகாரம் 16 – Read Holy Bible Book Of Mark Chapter 16 In Tamil With English Reference


1 - ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

English:- When The Sabbath Was Over, Mary Magdalene, Mary The Mother Of James, And Salome Bought Spices So That They Might Go To Anoint Jesus' Body.

மாற்கு 16-1 - Mark 16-1ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,

2 - வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,

English:- Very Early On The First Day Of The Week, Just After Sunrise, They Were On Their Way To The Tomb


3 - கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

English:- And They Asked Each Other, "Who Will Roll The Stone Away From The Entrance Of The Tomb?"

மாற்கு 16-3 - Mark 16-3கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

4 - அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.

English:- But When They Looked Up, They Saw That The Stone, Which Was Very Large, Had Been Rolled Away.

மாற்கு 16-4 - Mark 16-4அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.

5 - அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.

English:- As They Entered The Tomb, They Saw A Young Man Dressed In A White Robe Sitting On The Right Side, And They Were Alarmed.

மாற்கு 16-5 - Mark 16-5அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.

6 - அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

English:- "Don't Be Alarmed," He Said. "You Are Looking For Jesus The Nazarene, Who Was Crucified. He Has Risen! He Is Not Here. See The Place Where They Laid Him.

மாற்கு 16-6 - Mark 16-6அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

7 - நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

English:- But Go, Tell His Disciples And Peter, 'He Is Going Ahead Of You Into Galilee. There You Will See Him, Just As He Told You.' "

மாற்கு 16-7 - Mark 16-7நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

8 - நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.

English:- Trembling And Bewildered, The Women Went Out And Fled From The Tomb. They Said Nothing To Anyone, Because They Were Afraid.

மாற்கு 16-8 - Mark 16-8நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.

9 - வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

English:- When Jesus Rose Early On The First Day Of The Week, He Appeared First To Mary Magdalene, Out Of Whom He Had Driven Seven Demons.

மாற்கு 16-9 - Mark 16-9வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.

10 - அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.

English:- She Went And Told Those Who Had Been With Him And Who Were Mourning And Weeping.


11 - அவர் உயிரோடிருக்கிறார் என்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.

English:- When They Heard That Jesus Was Alive And That She Had Seen Him, They Did Not Believe It.

மாற்கு 16-11 - Mark 16-11அவர் உயிரோடிருக்கிறார் என்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.

12 - அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.

English:- Afterward Jesus Appeared In A Different Form To Two Of Them While They Were Walking In The Country.

மாற்கு 16-12 - Mark 16-12அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.

13 - அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

English:- These Returned And Reported It To The Rest; But They Did Not Believe Them Either.

மாற்கு 16-13 - Mark 16-13அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

14 - அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

English:- Later Jesus Appeared To The Eleven As They Were Eating; He Rebuked Them For Their Lack Of Faith And Their Stubborn Refusal To Believe Those Who Had Seen Him After He Had Risen.

மாற்கு 16-14 - Mark 16-14அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

15 - பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

English:- He Said To Them, "Go Into All The World And Preach The Good News To All Creation.

மாற்கு 16-15 - Mark 16-15பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

16 - விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

English:- Whoever Believes And Is Baptized Will Be Saved, But Whoever Does Not Believe Will Be Condemned.

மாற்கு 16-16 - Mark 16-16விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

17 - விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

English:- And These Signs Will Accompany Those Who Believe: In My Name They Will Drive Out Demons; They Will Speak In New Tongues;

மாற்கு 16-17 - Mark 16-17விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

18 - சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

English:- They Will Pick Up Snakes With Their Hands; And When They Drink Deadly Poison, It Will Not Hurt Them At All; They Will Place Their Hands On Sick People, And They Will Get Well."

மாற்கு 16-18 - Mark 16-18சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

19 - இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

English:- After The Lord Jesus Had Spoken To Them, He Was Taken Up Into Heaven And He Sat At The Right Hand Of God.

மாற்கு 16-19 - Mark 16-19இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.

20 - அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

English:- Then The Disciples Went Out And Preached Everywhere, And The Lord Worked With Them And Confirmed His Word By The Signs That Accompanied It.


Previous Chapter Next Chapter