யோபு 17 – Job 17


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 17 – Read Holy Bible Book Of Job Chapter 17 In Tamil With English Reference


1 - என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

English:- My Spirit Is Broken, My Days Are Cut Short, The Grave Awaits Me.

யோபு 17-1 - Job 17-1என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

2 - பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.

English:- Surely Mockers Surround Me; My Eyes Must Dwell On Their Hostility.


3 - தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

English:- "Give Me, O God, The Pledge You Demand. Who Else Will Put Up Security For Me?

யோபு 17-3 - Job 17-3தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

4 - நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

English:- You Have Closed Their Minds To Understanding; Therefore You Will Not Let Them Triumph.

யோபு 17-4 - Job 17-4நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

5 - எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

English:- If A Man Denounces His Friends For Reward, The Eyes Of His Children Will Fail.

யோபு 17-5 - Job 17-5எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

6 - ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.

English:- "God Has Made Me A Byword To Everyone, A Man In Whose Face People Spit.

யோபு 17-6 - Job 17-6ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.

7 - இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.

English:- My Eyes Have Grown Dim With Grief; My Whole Frame Is But A Shadow.

யோபு 17-7 - Job 17-7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.

8 - சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

English:- Upright Men Are Appalled At This; The Innocent Are Aroused Against The Ungodly.

யோபு 17-8 - Job 17-8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

9 - நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

English:- Nevertheless, The Righteous Will Hold To Their Ways, And Those With Clean Hands Will Grow Stronger.

யோபு 17-9 - Job 17-9நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

10 - இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.

English:- "But Come On, All Of You, Try Again! I Will Not Find A Wise Man Among You.


11 - என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.

English:- My Days Have Passed, My Plans Are Shattered, And So Are The Desires Of My Heart.

யோபு 17-11 - Job 17-11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.

12 - அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.

English:- These Men Turn Night Into Day; In The Face Of Darkness They Say, 'Light Is Near.'

யோபு 17-12 - Job 17-12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.

13 - அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

English:- If The Only Home I Hope For Is The Grave, If I Spread Out My Bed In Darkness,

யோபு 17-13 - Job 17-13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

14 - அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

English:- If I Say To Corruption, 'You Are My Father,' And To The Worm, 'My Mother' Or 'My Sister,'

யோபு 17-14 - Job 17-14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

15 - என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

English:- Where Then Is My Hope? Who Can See Any Hope For Me?

யோபு 17-15 - Job 17-15என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

16 - அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.

English:- Will It Go Down To The Gates Of Death ? Will We Descend Together Into The Dust?"

யோபு 17-16 - Job 17-16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.


Previous Chapter Next Chapter