ஏசாயா 20 – Isaiah 20


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 20 – Read Holy Bible Book Of Isaiah Chapter 20 In Tamil With English Reference


1 - தர்த்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,

English:- In The Year That The Supreme Commander, Sent By Sargon King Of Assyria, Came To Ashdod And Attacked And Captured It-

ஏசாயா 20-1 - Isaiah 20-1தர்த்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,

2 - கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.

English:- At That Time The Lord Spoke Through Isaiah Son Of Amoz. He Said To Him, "Take Off The Sackcloth From Your Body And The Sandals From Your Feet." And He Did So, Going Around Stripped And Barefoot.


3 - அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,

English:- Then The Lord Said, "Just As My Servant Isaiah Has Gone Stripped And Barefoot For Three Years, As A Sign And Portent Against Egypt And Cush,

ஏசாயா 20-3 - Isaiah 20-3அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,

4 - அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.

English:- So The King Of Assyria Will Lead Away Stripped And Barefoot The Egyptian Captives And Cushite Exiles, Young And Old, With Buttocks Bared-to Egypt's Shame.

ஏசாயா 20-4 - Isaiah 20-4அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.

5 - அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:

English:- Those Who Trusted In Cush And Boasted In Egypt Will Be Afraid And Put To Shame.

ஏசாயா 20-5 - Isaiah 20-5அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:

6 - இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.

English:- In That Day The People Who Live On This Coast Will Say, 'See What Has Happened To Those We Relied On, Those We Fled To For Help And Deliverance From The King Of Assyria! How Then Can We Escape?' "

ஏசாயா 20-6 - Isaiah 20-6இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.


Previous Chapter Next Chapter