பரிசுத்த வேதாகமம் எசேக்கியேல் அதிகாரம் 28 – Read Holy Bible Book Of Ezekiel Chapter 28 In Tamil With English Reference
2 - மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.
English:- "Son Of Man, Say To The Ruler Of Tyre, 'This Is What The Sovereign Lord Says: " 'In The Pride Of Your Heart You Say, "I Am A God; I Sit On The Throne Of A God In The Heart Of The Seas." But You Are A Man And Not A God, Though You Think You Are As Wise As A God.
3 - இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.
English:- Are You Wiser Than Daniel ? Is No Secret Hidden From You?
4 - நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.
English:- By Your Wisdom And Understanding You Have Gained Wealth For Yourself And Amassed Gold And Silver In Your Treasuries.
5 - உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.
English:- By Your Great Skill In Trading You Have Increased Your Wealth, And Because Of Your Wealth Your Heart Has Grown Proud.
6 - ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்
English:- " 'Therefore This Is What The Sovereign Lord Says: " 'Because You Think You Are Wise, As Wise As A God,
7 - இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்.
English:- I Am Going To Bring Foreigners Against You, The Most Ruthless Of Nations; They Will Draw Their Swords Against Your Beauty And Wisdom And Pierce Your Shining Splendor.
8 - உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்.
English:- They Will Bring You Down To The Pit, And You Will Die A Violent Death In The Heart Of The Seas.
9 - உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,
English:- Will You Then Say, "I Am A God," In The Presence Of Those Who Kill You? You Will Be But A Man, Not A God, In The Hands Of Those Who Slay You.
10 - மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் சாவதுபோல் சாவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
English:- You Will Die The Death Of The Uncircumcised At The Hands Of Foreigners. I Have Spoken, Declares The Sovereign Lord .' "
12 - மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
English:- "Son Of Man, Take Up A Lament Concerning The King Of Tyre And Say To Him: 'This Is What The Sovereign Lord Says: " 'You Were The Model Of Perfection, Full Of Wisdom And Perfect In Beauty.
13 - நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
English:- You Were In Eden, The Garden Of God; Every Precious Stone Adorned You: Ruby, Topaz And Emerald, Chrysolite, Onyx And Jasper, Sapphire, Turquoise And Beryl. Your Settings And Mountings Were Made Of Gold; On The Day You Were Created They Were Prepared.
14 - நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
English:- You Were Anointed As A Guardian Cherub, For So I Ordained You. You Were On The Holy Mount Of God; You Walked Among The Fiery Stones.
15 - நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
English:- You Were Blameless In Your Ways From The Day You Were Created Till Wickedness Was Found In You.
16 - உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
English:- Through Your Widespread Trade You Were Filled With Violence, And You Sinned. So I Drove You In Disgrace From The Mount Of God, And I Expelled You, O Guardian Cherub, From Among The Fiery Stones.
17 - உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
English:- Your Heart Became Proud On Account Of Your Beauty, And You Corrupted Your Wisdom Because Of Your Splendor. So I Threw You To The Earth; I Made A Spectacle Of You Before Kings.
18 - உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.
English:- By Your Many Sins And Dishonest Trade You Have Desecrated Your Sanctuaries. So I Made A Fire Come Out From You, And It Consumed You, And I Reduced You To Ashes On The Ground In The Sight Of All Who Were Watching.
19 - ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
English:- All The Nations Who Knew You Are Appalled At You; You Have Come To A Horrible End And Will Be No More.' "
21 - மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சீதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்.
English:- "Son Of Man, Set Your Face Against Sidon; Prophesy Against Her
22 - கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
English:- And Say: 'This Is What The Sovereign Lord Says: " 'I Am Against You, O Sidon, And I Will Gain Glory Within You. They Will Know That I Am The Lord , When I Inflict Punishment On Her And Show Myself Holy Within Her.
23 - நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
English:- I Will Send A Plague Upon Her And Make Blood Flow In Her Streets. The Slain Will Fall Within Her, With The Sword Against Her On Every Side. Then They Will Know That I Am The Lord .
24 - இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிறமுள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள்.
English:- " 'No Longer Will The People Of Israel Have Malicious Neighbors Who Are Painful Briers And Sharp Thorns. Then They Will Know That I Am The Sovereign Lord .
25 - கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.
English:- " 'This Is What The Sovereign Lord Says: When I Gather The People Of Israel From The Nations Where They Have Been Scattered, I Will Show Myself Holy Among Them In The Sight Of The Nations. Then They Will Live In Their Own Land, Which I Gave To My Servant Jacob.
26 - அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
English:- They Will Live There In Safety And Will Build Houses And Plant Vineyards; They Will Live In Safety When I Inflict Punishment On All Their Neighbors Who Maligned Them. Then They Will Know That I Am The Lord Their God.' "