பரிசுத்த வேதாகமம் எசேக்கியேல் அதிகாரம் 15 – Read Holy Bible Book Of Ezekiel Chapter 15 In Tamil With English Reference
2 - மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?
English:- "Son Of Man, How Is The Wood Of A Vine Better Than That Of A Branch On Any Of The Trees In The Forest?
3 - யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
English:- Is Wood Ever Taken From It To Make Anything Useful? Do They Make Pegs From It To Hang Things On?
4 - இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோம்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
English:- And After It Is Thrown On The Fire As Fuel And The Fire Burns Both Ends And Chars The Middle, Is It Then Useful For Anything?
5 - இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?
English:- If It Was Not Useful For Anything When It Was Whole, How Much Less Can It Be Made Into Something Useful When The Fire Has Burned It And It Is Charred?
6 - ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
English:- "Therefore This Is What The Sovereign Lord Says: As I Have Given The Wood Of The Vine Among The Trees Of The Forest As Fuel For The Fire, So Will I Treat The People Living In Jerusalem.
7 - என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
English:- I Will Set My Face Against Them. Although They Have Come Out Of The Fire, The Fire Will Yet Consume Them. And When I Set My Face Against Them, You Will Know That I Am The Lord .
8 - அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
English:- I Will Make The Land Desolate Because They Have Been Unfaithful, Declares The Sovereign Lord ."