2 இராஜாக்கள் 11 – 2 Kings 11


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் 2 இராஜாக்கள் அதிகாரம் 11 – Read Holy Bible Book Of 2 Kings Chapter 11 In Tamil With English Reference


1 - அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

English:- When Athaliah The Mother Of Ahaziah Saw That Her Son Was Dead, She Proceeded To Destroy The Whole Royal Family.

2 இராஜாக்கள் 11-1 - 2 Kings 11-1அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.

2 - யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்து வைத்தார்கள்.

English:- But Jehosheba, The Daughter Of King Jehoram And Sister Of Ahaziah, Took Joash Son Of Ahaziah And Stole Him Away From Among The Royal Princes, Who Were About To Be Murdered. She Put Him And His Nurse In A Bedroom To Hide Him From Athaliah; So He Was Not Killed.


3 - இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

English:- He Remained Hidden With His Nurse At The Temple Of The Lord For Six Years While Athaliah Ruled The Land.

2 இராஜாக்கள் 11-3 - 2 Kings 11-3இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

4 - ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

English:- In The Seventh Year Jehoiada Sent For The Commanders Of Units Of A Hundred, The Carites And The Guards And Had Them Brought To Him At The Temple Of The Lord . He Made A Covenant With Them And Put Them Under Oath At The Temple Of The Lord . Then He Showed Them The King's Son.

2 இராஜாக்கள் 11-4 - 2 Kings 11-4ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

5 - அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.

English:- He Commanded Them, Saying, "This Is What You Are To Do: You Who Are In The Three Companies That Are Going On Duty On The Sabbath-a Third Of You Guarding The Royal Palace,

2 இராஜாக்கள் 11-5 - 2 Kings 11-5அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.

6 - மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.

English:- A Third At The Sur Gate, And A Third At The Gate Behind The Guard, Who Take Turns Guarding The Temple-

2 இராஜாக்கள் 11-6 - 2 Kings 11-6மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.

7 - இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.

English:- And You Who Are In The Other Two Companies That Normally Go Off Sabbath Duty Are All To Guard The Temple For The King.

2 இராஜாக்கள் 11-7 - 2 Kings 11-7இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.

8 - நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன்; கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.

English:- Station Yourselves Around The King, Each Man With His Weapon In His Hand. Anyone Who Approaches Your Ranks Must Be Put To Death. Stay Close To The King Wherever He Goes."

2 இராஜாக்கள் 11-8 - 2 Kings 11-8நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன்; கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.

9 - ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.

English:- The Commanders Of Units Of A Hundred Did Just As Jehoiada The Priest Ordered. Each One Took His Men-those Who Were Going On Duty On The Sabbath And Those Who Were Going Off Duty-and Came To Jehoiada The Priest.

2 இராஜாக்கள் 11-9 - 2 Kings 11-9ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.

10 - ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.

English:- Then He Gave The Commanders The Spears And Shields That Had Belonged To King David And That Were In The Temple Of The Lord .


11 - காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம்தொடங்கி அதின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.

English:- The Guards, Each With His Weapon In His Hand, Stationed Themselves Around The King-near The Altar And The Temple, From The South Side To The North Side Of The Temple.

2 இராஜாக்கள் 11-11 - 2 Kings 11-11காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம்தொடங்கி அதின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.

12 - அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.

English:- Jehoiada Brought Out The King's Son And Put The Crown On Him; He Presented Him With A Copy Of The Covenant And Proclaimed Him King. They Anointed Him, And The People Clapped Their Hands And Shouted, "Long Live The King!"

2 இராஜாக்கள் 11-12 - 2 Kings 11-12அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.

13 - ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,

English:- When Athaliah Heard The Noise Made By The Guards And The People, She Went To The People At The Temple Of The Lord .

2 இராஜாக்கள் 11-13 - 2 Kings 11-13ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,

14 - இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

English:- She Looked And There Was The King, Standing By The Pillar, As The Custom Was. The Officers And The Trumpeters Were Beside The King, And All The People Of The Land Were Rejoicing And Blowing Trumpets. Then Athaliah Tore Her Robes And Called Out, "Treason! Treason!"

2 இராஜாக்கள் 11-14 - 2 Kings 11-14இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.

15 - ஆசாரியனாகிய யோய்தா ராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

English:- Jehoiada The Priest Ordered The Commanders Of Units Of A Hundred, Who Were In Charge Of The Troops: "Bring Her Out Between The Ranks And Put To The Sword Anyone Who Follows Her." For The Priest Had Said, "She Must Not Be Put To Death In The Temple Of The Lord ."

2 இராஜாக்கள் 11-15 - 2 Kings 11-15ஆசாரியனாகிய யோய்தா ராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.

16 - அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.

English:- So They Seized Her As She Reached The Place Where The Horses Enter The Palace Grounds, And There She Was Put To Death.

2 இராஜாக்கள் 11-16 - 2 Kings 11-16அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.

17 - அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,

English:- Jehoiada Then Made A Covenant Between The Lord And The King And People That They Would Be The Lord 'S People. He Also Made A Covenant Between The King And The People.

2 இராஜாக்கள் 11-17 - 2 Kings 11-17அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,

18 - பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்று போட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.

English:- All The People Of The Land Went To The Temple Of Baal And Tore It Down. They Smashed The Altars And Idols To Pieces And Killed Mattan The Priest Of Baal In Front Of The Altars. Then Jehoiada The Priest Posted Guards At The Temple Of The Lord .

2 இராஜாக்கள் 11-18 - 2 Kings 11-18பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்று போட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.

19 - நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப் பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

English:- He Took With Him The Commanders Of Hundreds, The Carites, The Guards And All The People Of The Land, And Together They Brought The King Down From The Temple Of The Lord And Went Into The Palace, Entering By Way Of The Gate Of The Guards. The King Then Took His Place On The Royal Throne,

2 இராஜாக்கள் 11-19 - 2 Kings 11-19நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப் பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

20 - தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.

English:- And All The People Of The Land Rejoiced. And The City Was Quiet, Because Athaliah Had Been Slain With The Sword At The Palace.


21 - யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

English:- Joash Was Seven Years Old When He Began To Reign.

2 இராஜாக்கள் 11-21 - 2 Kings 11-21யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.


Previous Chapter Next Chapter